Announcement

Collapse
No announcement yet.

திரு வேங்கடத்து அந்தாதி 87/100 கண்ணன் மண்ணும்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திரு வேங்கடத்து அந்தாதி 87/100 கண்ணன் மண்ணும்

    திரு வேங்கடத்து அந்தாதி 87/100 கண்ணன் மண்ணும் விண்ணும் உய்ய வந்தான் எனில் முக்தி !

    கோதண்டத்தானத்தன் வாள்கதை நேமியன் கோலவட
    வேதண்டத்தானத்தநின்னிசையான் மண்ணும் விண்ணுமுய்ய
    மூதண்டத்தானத்தவதரித்தானெனின் முத்தி வினைத்-
    தீதண்டத்தானத்தநுவெடுத்தா
    னெனிற்றீனரகே



    பதவுரை :
    கோதண்டத்தான் + நத்தன்

    வேதண்டத்தான் + அத்தன்
    மூது + அண்ட + தானத்து
    தீது + அண்ட + தான் + அத்தனு

    கோதண்டத்தான் கோதண்டம் எனும் வில்லை உடையவனும்
    நத்தன் சங்கை உடையவனும்
    வாள் கதை நேமியன் வாளையும் கதையையும் சக்கரத்தையும் உடையவனும்
    கோல வட வேதண்டத்தான் அழகிய வட வேங்கடத்தில் இருக்கும்
    அத்தன் இன் இசையான் தலைவனும் இனிய குழல் ஊதுபவனுமான திருமால்
    மண்ணும் விண்ணும் உய்ய பூமியும் தேவ லோகமும் வாழ
    மூது அண்ட தானத்து பழமையான அண்டத்துக்குள் உள்ள பூமியில்
    அவதரித்தான் எனில் அவதாரம் செய்தான் என்று கூறினால்
    முத்தி ஸ்ரீ வைகுண்டம் கிடைக்கும்
    வினை தீது அண்ட தனது விதி வசத்தால் தான்
    தான் அத தனு எடுத்தான் எனில் அவன் அந்தந்த உடலில் பிறந்தான் என்று கூறினால்
    தீ நரகமே கொடிய நரகமே நேரும்
    Last edited by sridharv1946; 23-08-13, 20:44.
Working...
X