மழை பெய்து கொண்டிருக்கிறது.

வாயிற்குறட்டை ஒட்டியுள்ள அறையில் அமர்ந்துள்ள பெரியவாள் கப்பல்களைப் பற்றி விசாரணை செய்கிறார் எத்தனைக் கப்பல்கள், ஒன்றுக்கொன்று இடித்துக் கொள்ளாமல் போகின்றனவா, எதுவாவது முழுகி விட்டதா இத்யாதி கேள்விகள்.

யாரைக் கேட்கிறாரென்று கூடியிருப்போருக்குப் புரியவில்லை. அவர்களில் ஒருவர் விசாகப்பட்டணம் துறைமுக அலுவலர். அவர் தம்மிடம்தான் பெரியவாள் கேட்கிறார் என்று நினைத்தார். கப்பல்களைப் பற்றிக் கேள்வி என்ற அளவுக்குப் புரிந்தாலும் குறிப்பாக இன்ன கேள்வி என்று அவருக்குத் தெளிவுபடவில்லை. எனவே தெளிவுறுத்துமாறு பெரியவாளிடமே கேட்டுக் கொண்டார்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsபெரியவாள் அழகாகச் சிரித்தார். த்ளாயிரத்து முப்பத்தாறுல நான் வைஸாக் வந்து போர்ட் எல்லாம் சுத்திப் பாத்திருக்கேன். ஆனா இப்ப நான் கேள்வி கேட்டுண்டிருந்தது ஒங்க கப்பலைப் பத்தி இல்லே. நானே பண்ணின கப்பல்களைப் பத்தித்தான் கேட்டிண்டிருந்தேன்.

இங்கே செல பசங்க அழுதுண்டு இருந்துதுகள். மழை பெய்யறதோன்னோ? அதனால ஒரு வழி தோணித்து. காயிதத்துல அஞ்சாறு கப்பல் பண்ணி அதுகளுக்குக் குடுத்து, ரோட்ல ஜலம் ஓடிண்டிருக்கோன்னோ, அதுல விட்டு வெளயாடறதுக்கு அனுப்பிச்சேன். அதுகளும் அழுகையை நிறுத்திட்டு குதிச்சுண்டு ஓடிப்போய் வெளயாடிண்டிருக்குகள். அந்தக் கப்பல்களோட க்ஷேமலாபம் தான் விசாரிச்சுண்டிருக்கேன். நீ என்னமா பதில் சொல்லுவே?
குறும்பு நகை பூத்த குருநாதன் மீண்டும் கப்பல் விசாரணையைத் தொடர்ந்தார்.

வாயிற் குறட்டிலிருந்து மழலைக் குரல்களில் உத்ஸாஹமாகப் பதில்கள் வந்தன.

ஸம்ஸாரக் கடலிலிருந்து கரையேற்றும் கப்பலோட்டி இப்படியோர் இனிய விதத்தில் கப்பல் தயாரிப்பாளருமாகியிருக்கிறார்!

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!