திருமாற்பேறு காஞ்சீபுரத்தில் இருந்து அரக்கோணம் / திருத்தணி செல்லும் சாலையில் திருமாற்பேறு ரயில் நிறுத்தமிடத்தில் இறங்கி ஆட்டோவில், அரைமணி நேர பயண தூரத்தில் திருமாற்பேறு ஊர் இருக்கின்றது.


Click image for larger version. 

Name:	Chakrathazvar.jpg 
Views:	7 
Size:	12.8 KB 
ID:	1081


ஆதிசிவனின் அறுபத்து நான்கு கோலங்களில் ஐம்பத்து நான்காவது திருக்கோலம் சக்கரதான மூர்த்தியாகும்.

ஒரு பொருளை ஒருவரிடமிருந்து பெற வேண்டுமானால், அவரின் மனதினைத் தன்பக்கம் திருப்ப வேண்டும்.


இறைவனுடைய கவனத்தினைத் தன் பக்கம் திருப்ப வேண்டும் என்பதற்காக, இறைவனை நோக்கி , திருமாலானவர் ஆயிரத்தெட்டு நாட்கள் பூஜிக்க விரும்பினார். அதற்கான பொருத்தமான இடம் தேடி, இறைவனைப் பூஜித்த இடம் திருமாற்பேறு ஆகும்.


தினம், திருக்குளத்தில் நீராடி, தினம் ஒரு தாமரை மலரைக் கொண்டு பூஜித்து வந்தார். தன் மீது, உண்மை பக்தி கொண்டு பூஜிக்கின்றாரா என்று சோதிக்க விரும்பி , கொய்து வந்த ஆயிரத்தெட்டாம் மலரைக் காணாமல் செய்து விட்டார்.


பூஜை வேளையில் , பூஜிக்க வேண்டிய மலர் காணாமல் போக, கண நேரமும் தாமதியாது, கண்களையே தாமரை மலராக எண்ணி, ஒரு கண்ணை எடுத்து பூஜித்தார்.


தரிசனமளித்த இறைவன், திரும்ப கண்களை அளித்தார். தாமரை மணாளனுக்கு, கமலக் கண்ணன் எனும் திருப்பெயரையும் வழங்கி, தன்னிடம் சக்கராயுதம் பெறவே, இப்பூஜை என்பதனை உணர்ந்து சக்கராயுதம் எனப்படும் சுதர்சன சக்கரத்தை வழங்கினார்.


இவ்வாலயத்து இறைவனை வழிபட, இருபத்தேழு நட்சத்திரக்காரர்களால் , பட வேண்டிய துன்பங்கள் கொடூரமானதாக இல்லாமல், களைந்தெறியும் சிறப்பு மிக்க ஆலயம். எதிரியால் மிகவும் துன்பப் படுவோரும், கண்கலங்கி எதிரியை வெல்ல முடியாமல் அவதியுறுவோரும், இவ்வாலயம் வந்து பரிகார பூஜித்தால், நலம் பெறுவார்கள்.


தேங்காய் , ஆறு வாழைப் பழம், ஊது வத்தி, மஞ்சள் சாமந்திப் பூ / முல்லைப் பூ கொடுத்து அர்ச்சனை செய்ய வேண்டும்.

அதன் பிறகு, இறைவனை வணங்கும் திருமாலிற்கும் அர்ச்சனை செய்தல் வேண்டும். அதன் பின்பாக, திருமாலின் முன்பாக உள்ள நந்திகேசுவரரின் முன்பாக, ஒன்பது நெய் தீபங்களை, ஒரு நெய் அகல் தீபங்கொண்டு ஏற்றி, ஒருவரையும் இனி எதிரியாய் நினைத்து கெடுதல் மறந்தும் செய்ய மாட்டேன். எந்த எதிரியும், என் சொல்லாலும், செயலாலும், புதியதாக உருவாகாமலும், உருவாக்கிக் கொண்ட எதிரியாலும் துன்பம் நேராதிருக்க அருள வேண்டுமென்ற கோரிக்கை வைக்க வேண்டும். அதன் பின்பாக, இடவலமாக, ஐந்து சுற்றுகள் சுற்றி வந்து விழுந்து வணங்கி, இருபது நிமிடம் அமர வேண்டும். இருபத்தோராவது நிமிடம் , எழுந்து சென்று , அம்பாளைத் தரிசிக்க வேண்டும்.அம்பாளிற்கும் , தேங்காய், ஆறு மஞ்சள் வாழைப் பழம், மல்லிகைப் பூ, ஊதுவத்திகள் மற்றும் நெய் , மஞ்சள் தூள், குங்குமம் கொடுத்து அர்ச்சனை செய்திடுதல் வேண்டும்.


அர்ச்சனை செய்திட்ட பின் மும்முறை வலம் வருமுன்பாக, சிம்ம வாகனத்தின் முன்பாக அம்பாளை நோக்கியவாறு, இரு நெய் அகல் தீபம் ஒரு நெய் அகல் தீபம் கொண்டு ஏற்றி, ஏற்றிய நெய் தீபத்தினை, இரு விளக்கின் முன்பாக வைக்க அக்கு வடிவில் காட்சியளிக்கும். அதன் பின் மும்முறை இட வலம் வந்து சாஷ்டாங்க நம்ஸ்காரம் செய்து வணங்க வேண்டும்.


இருபது நிமிட நேரம் அமர்ந்து, இருபத்தோராம் நிமிடம் எழுந்து , அருகில் உள்ள தல விருசசம அடியில் உள்ள நாகேசுவரருக்கு நான்கு நெய் அகல் தீபம், ஐந்து ஊது வத்தி ஏற்றி கற்பூரம் ஏற்றி வணங்கிடுதல் வேண்டும். மும்முறை வலம் வந்து, விழுந்து வணங்கி, நான்கு நிமிடங்கள் அமர்ந்து ஐந்தாம் நிமிடம் கொடி மரத்தினருகில் விழுந்து வணங்கி, ஆலயம் விட்டு வெளியேறி விடவேண்டும்.


அதன் பிறகு, தயிர் சாதம் பைரவருக்கு, வேண்டி வணங்கி, வைத்தல் வேண்டும். இதனை வேறு விலங்கினங்கள் எடுக்காதபடி பார்த்துக் கொள்ளுதல் அவசியம். பைரவர் தயிர் அன்னம் சாப்பிட்டால் தான் பரிகாரம் நல்லபடியாக முடிந்தது. இல்லையெனில், மறுமுறை ஆலயம் வந்து பரிகாரம் செய்ய வேண்டும்.


இவ்வாலயம் அருகில் நிறைய குரங்குகள் உள்ளன. அவற்றிற்கு படைத்த வாழைப் பழங்களைல் ஆறும், ஆறு வாழைப்பழங்கள் மற்றும் தேங்காய்களை முதியோருக்கும் கொடுத்து விட வேண்டும்.


இல்லம் திரும்பி, சூரனை வென்ற திருச்செந்தூராண்டவருக்கு ஒரு நெய் தீபமேற்றி, வணங்கி பரிகாரம் முற்றுப் பெற செய்தல் அவசியம்.
தீபம் அணையும் வரை வீட்டை விட்டு வெளியேறுதல் கூடாது. ஆலய வழிபாட்டின் போதும், தேவையற்ற பேச்சுக்கள் பேசுதல் கூடாது.


முதல் பகுதி பரிகாரம் முடிந்தபின், இரண்டாம் பரிகாரத்தினை இருபத்தேழு நாட்கள் தொடர்ந்தாற்போல், அல்லது இருபத்தேழு வாரங்கள் அல்லது இருபத்தேழு மாதங்கள் வியாழக்கிழமைகளில் திருமால் ( அ ) பெருமாள் ஆலயங்களில் தனி சன்னதியில் வீற்றிருக்கும் சுதர்சன சக்கரத்தாழ்வாருக்கு, மலர் கொடுத்து இருபத்தேழு நெய் அகல் தீபங்களை ஒரு நெய் அகல் தீபத்தால் ஏற்றி, ஊதுவத்தி ஐந்து ஏற்றி கற்பூரம் ஏற்றி வணங்க வேண்டும்.


சிவாலயத்தில் வைத்த அதே வேண்டுகோளை விடுத்து மனமுருகி வழிபட வேண்டும். அதன் பின்பாக, இருபத்தேழு சுற்றுகள் சுற்றி வந்து வணங்க வேண்டும்.


இதில் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று என்னவென்றால், சக்கரத்தாழ்வார் முன்புறமும், பின்புறம் யோக ந்ரசிம்மரும் வீற்றிருப்பது தான். கோபத்தால் தான், அனைத்து பிரச்னைகளும் எதிரிகளும் உருவாகின்றன. உக்கிர நரசிம்மராக இல்லாமல், மௌன யோக நரசிம்மராக இருப்பவரையும் சேர்த்து வலம் வருவதால், கோபங்கள் நீக்கி, நல்ல வாழ்வும் வளமும் நரசிம்மர் அருளுகிறார்.


எதிரிகள் மட்டுமல்லாது, தீராத நோய்கள் இருந்தாலும் அவைகளும் பரிபூரணமாக நீங்கிடவும் செய்வார் எம்மிறைவன்.


திருமாற்பேறு சென்று வணங்கி வழிபட்டபின், சக்கரத்தாழ்வார் வழிபாட்டினை இருபத்தேழு நாட்கள் செய்தால் வாழ்வில் நலம் பல பெறுவார்கள். பெண்கள் இடையில் விலக்காகி விட்டால், இயற்கைத் தடை என்பதால், விலக்கு முடிந்தபின் மீண்டும் வழிபாடு செய்யலாம். ஆடவர்கள் தொடர்ந்து இருபத்தேழு நாட்கள் வழிபட வேண்டும்.

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=j8xFrBDSt3khttp://www.krishnaa.in/2012/06/blog-post.html#pages/2


Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends