உத்தர பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த 6ம் வகுப்பு மாணவி ஐஸ்வர்யா பரசார் என்ற சிறுமியால் இந்த பூகம்பம் கிளம்பியுள்ளது. மகாத்மா காந்தியை இந்தியாவின் தந்தை என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்படி அப்போதைய ஜனாதிபதி பிரதிபா பாட்டீலுக்கும், பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் இச்சிறுமி கடிதம் எழுதினாள். அதற்கு எந்த பதிலும் கிடைக்காததால், மீண்டும் மீண்டும் பல கடிதங்களை எழுதினாள். அதற்கும் பதில் அளிக்கப்படவில்லை.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsஇதைத் தொடர்ந்து, தகவல் உரிமைச் சட்டத்தை ஐஸ்வர்யா கையில் எடுத்தாள். இதுவரை நான் எழுதிய கடிதங்களின் மீது ஜனாதிபதியும், பிரதமரும் என்ன நடவடிக்கை எடுத்துள்ளனர்? மகாத்மா காந்திக்கு அரசு அளிக்கும் அங்கீகாரம் என்ன? என்பது போன்ற விவரங்களை தெரிவிக்கும்படி தகவல் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்தாள்.

இதையடுத்து, ஐஸ்வர்யா கோரிக்கை மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை விவரங்களை அவளுக்கு தெரிவிக்கும்படி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் பிரதமர் மன்மோகன் சிங்கும் மத்திய உள்துறை அமைச்சகத்தை கேட்டு கொண்டனர்.

அதன்படி, ஐஸ்வர்யாவுக்கு உள்துறை அமைச்சகம் பதில் அனுப்பியுள்ளது. அதில், மகாத்மா காந்தியை தேசத் தந்தையாக அறிவிக்கும்படி ஜனாதிபதி, பிரதமருக்கு தாங்கள் எழுதிய கடிதத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மகாத்மா காந்திக்கு அந்த பட்டத்தை வழங்க முடியாது. ஏனெனில், கல்வி மற்றும் ராணுவத்தை சேர்ந்தவர்களை தவிர மற்ற யாருக்கும் பட்டங்கள் அளிக்க, இந்திய அரசியல் சட்டம் 18 (1)வது பிரிவு அனுமதிக்கவில்லை என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம், மகாத்மா காந்தியை தேசத் தந்தை என்று அழைத்து வருவது அதிகாரப்பூர்வமானது அல்ல என்பது உறுதியாகி உள்ளது.


Read more here:http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=29010