Announcement

Collapse
No announcement yet.

திரு வேங்கடத்து அந்தாதி 92/100 இப்பாடலின் சிற&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திரு வேங்கடத்து அந்தாதி 92/100 இப்பாடலின் சிற&

    திரு வேங்கடத்து அந்தாதி 92/100 இப்பாடலின் சிறப்பு என்ன ?

    பாவையிரங்குமசோதைக்கு முத்துப் பதுமச்செல்விக்-
    கேவையிரண்டன்ன கண்மணி நீலம் இருசரணப்-
    பூவையிரந்தவர்க்கின்பவளம் புல்ல
    க்கர்க்கென்று
    மாவையிரம் திருவேங்கடத்தோங்கு மரகதமே

    :
    பதவுரை: பாவை + இரங்கும்
    ஏவை + இரண்டு
    பூவை + இரந்தவர்க்கு
    மா + வையிரம்

    திருவேங்கடத்து ஓங்கும் மரகதமே திருவேங்கட மலையில் உயர்ந்த மரகத ரத்தினம் .
    பாவை இரங்கும் அசோதைக்கு பதுமைகளும் விரும்பும் அழகுடைய யசோதைக்கு
    முத்து முத்துப் போல் இருப்பவன் .
    பதுமச் செல்விக்கு தாமரை மலரில் இருக்கும் மகா லக்ஷ்மிக்கு
    இரண்டு ஏவை அன்ன கண்மணி நீலம் அம்புகளைப் போன்ற இரண்டு விழிகள் நீலமணி .
    இரு சரண
    ப் பூவை இரந்தவர்க்கு இரண்டு திருவடி மலரை விரும்புவோருக்கு
    இன்பவளம் இன்பப் பெருக்காம்
    புல் அரக்கர்க்கு இழிந்த அசுரர்களுக்கு
    என்றும் மா வையிரம் எப்போதும் பெரும் பகையாகும்
    Last edited by sridharv1946; 25-08-13, 20:20.
Working...
X