சிவபுரி - சிதம்பரம். (Sivapuri - Chidambaram.)

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite FriendsClick image for larger version. 

Name:	Sivapuri.jpg 
Views:	5 
Size:	55.5 KB 
ID:	1093

சிதம்பரத்திலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சிவபுரி.

இறைவன் - உச்சிநாதர், மத்யானேஸ்வரர்.

இறைவி - கனகாம்பிகை.

தல விருட்சம் - நெல்லி.

பொய்கை - கிருபா சமுத்திரம்.

பாடியவர் - திருஞானசம்பந்தர்.

புராணப் பெயர் - திருநெல்வாயில்.

வரலாறு! திருஞானசம்பந்தருக்கு 12 வயதில் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஆச்சாள்புரம் சிவலோகத் தியாகேசர் கோயிலுக்குச் செல்கிறார்கள். உச்சிப்பொழுதில் இந்த ஆலயத்தை அடைகின்றனர். அனைவருக்கும் உள்நின்று உடற்றும் பசி. கோயில் பணியாளர் வடிவில் வந்த ஈசன் அனைவருக்கும் உச்சிபொழுதில் அன்னமிட்டு மறைகிறார்! உச்சிப்பொழுதில் பசிப்பிணி போக்கியதால் இறைவன் உச்சிநாதர்! (மத்யானேஸ்வரர்.)

தலத்தின் சிறப்புகள்!

தேவாரப் பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் 3 ஆவது திருத்தலம்.

கண்வ மகரிஷி வழிபட்ட திருத்தலம்.

நெல்வயல்கள் மிகுந்து காணப்பட்ட தலம். திருநெல்வாயில் என்ற பெயர் கொண்டது. தற்போதைய பெயர் சிவபுரி.

கல்வெட்டுக்கள் கண்டெடுக்கப்பட்டு படியெடுக்கப்பட்டுள்ளது.

சிவபுரி மான்மியம் என்ற தலவரலாறு கொண்டது.

திருஞானசம்பந்தரின் பதிகத்திலிருந்து:

மறையி னார்மழு வாளி னார்மல்கு

பிறையி னார்பிறை யோடி லங்கிய

நிறையி னாரநெல் வாயிலார் தொழும்

இறைவ னாரெம துச்சி யாரே!


சிறிய, சிறப்பான சிவாலயம்!


Source:nagarathar