கிருஷ்ணருக்கென்று தனியாக தமிழகத்தில் கோவில்கள் குறைவு .ஒரு மடுவில் இருந்து நீர் எடுக்க வரும் மக்களை துன்புறுத்தும் காளிங்கராயன் என்ற பாம்பை கிருஷ்ணர் வதம் செய்தார் என புராண கதை ஒன்று உண்டு .அது நிகழ்ந்ததாக கூறப்படும் தலம் தஞ்சாவூர் அருகே உள்ளது .ஊத்துக்காடு என்ற அந்த ஊரில் கிருஷ்ணன் காளிங்கன் மீது நர்த்தனம் ஆடிய ஐம்பொன் திருவுருவம் உள்ளது .தமிழுக்கு மிகப்பெரும் தொண்டாற்றிய தமிழ்த்தாத்தா என அழைக்கப்படும் உ.வே.சாமிநாத ஐயர் பிறந்த ஊரும் இதுவே .


Click image for larger version. 

Name:	Krishna Temple.jpg 
Views:	1 
Size:	39.9 KB 
ID:	1114

ரோகிணி நட்சத்திரக்காரர்கள் வணங்கி வழிபட வேண்டிய ஸ்தலம் இது. ரோகிணி நட்சத்திர நாளில் இந்தத் தலத்துக்கு வந்து பிரார்த்தித்தால், சகல ஐஸ்வரியங்களையும் பெறலாம் என்பது ஐதீகம்.


Click image for larger version. 

Name:	Kalinga Narhanam.JPG 
Views:	2 
Size:	20.0 KB 
ID:	1113

தங்கள் குழந்தைகள் இசைத் துறையில் வல்லுநராக வேண்டும்; பாடுவதில், ஆடுவதில், வாத்தியக் கருவிகளை இசைப்பதில் பேரும் புகழும் பெற வேண்டும் என விரும்புபவர்கள், தங்கள் குழந்தைகளுடன் வந்து காளிங்க நர்த்தனரை பிரார்த்தித்துச் செல்ல... நினைத்த காரியம் இனிதே நடந்தேறும் என்கின்றனர் பக்தர்கள் ! உத்ஸவரின் திருப்பாதத்துக்கு கொலுசு சார்த்தி வழிபடுவது சிறப்பு. சர்ப்பத்தின் மேல் நின்றபடி ஆடினாலும், சர்ப்பத்துக்கும் கண்ணனுக்கும் மெல்லிய, நூலிழை அளவுக்கு இடைவெளியுடன் திகழ்கிற விக்கிரகத் திருமேனி, வியப்பின் உச்சம் !

தேவலோகப் பசுவான காமதேனு, தன் கன்றுகளான நந்தினி, பட்டி மற்றும் இதர பசுக்களுடன் ஊத்துக்காட்டில் இருந்தது. சிவனார் மீது கொண்ட பக்தியால், தினமும் பூக்களைப் பறித்து, அங்கேயுள்ள கயிலாசநாதருக்குச் சமர்ப்பித்து பூஜித்து வந்தது, காமதேனு. அந்த ஊரில் ஏராளமான பசுக்கள் இருந்ததால், அது ஆவூர் எனப்பட்டது. பசுக்கள் மேய்ச்சலுக்குச் செல்லும் இடம், கோ வந்த குடி ஆனது. அதுவே பிறகு கோவிந்தக்குடி என்றானது. அதே போல் பட்டி பசு, சிவனாருக்கு பூஜை செய்த ஊர் பட்டீஸ்வரம் எனப்பட்டது. இத்தனை ஊர்களிலும், ஊத்துக்காடுதான் காமதேனுவின் விருப்பமான தலமாக இருந்தது; காமதேனுவின் சுவாசமாகவே திகழ்ந்தது. எனவே, தேனுசுவாசபுரம் என்றும், மூச்சுக்காடு என்றும் அழைக்கப்பட்ட அந்த ஊர், இன்று ஊத்துக்காடு எனப்படுகிறது.

நாரதர் இங்கு வந்து, இங்கே இருந்த பசுக்களிடம் ஸ்ரீகிருஷ்ணரின் கதையைச் சொன்னார். அப்போது, காளிங்கன் எனும் பாம்பின் தலையில் நர்த்தனமாடி, அவனையும் அவனுடைய ஆணவத்தையும் அடக்கிய கதையை நாரதர் விவரிக்க... சிவ பக்தியோடு, மாயக்கண்ணன் மீதும் பக்தி கொண்டு வணங்கியது, காமதேனு. அவனுடைய புல்லாங்குழல் இசையைக் கேட்க வேண்டும் என்றும், அவனைத் தரிசிக்க வேண்டும் என்றும் ஏங்கித் தவித்தது. பசுவின் கோரிக்கையைக் கேட்காமல் இருப்பானா ஆயர்குலத்தோன் ?!

வேணுகானம் இசைத்தபடி, அங்கேயுள்ள நீரோடையில் காட்சி தந்தான் கண்ணன். அத்துடன், காளிங்கத்தில் நர்த்தனமாடுகிற கோலத்தையும் காட்டி அருளினான். பின்னாளில் இதனை அறிந்த சோழ மன்னன் ஒருவன், காளிங்கநர்த்தனருக்கு இங்கு கோயில் அமைத்தான் என்கிறது ஸ்தல புராணம்.

http://panjavarnam.blogspot.com/2011/08/blog-post_27.html
http://temple.dinamalar.com/New.php?id=1586

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite FriendsTamil Temples