Announcement

Collapse
No announcement yet.

3. அழகர் அந்தாதி - காப்பு (பராங்குசனைப் பணிவ&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 3. அழகர் அந்தாதி - காப்பு (பராங்குசனைப் பணிவ&

    3. அழகர் அந்தாதி - காப்பு (பராங்குசனைப் பணிவோம் !)

    அங்கத்தமிழ் மறையாயிரம் பாடி அளித்து உலகோர்
    தங்கட்கு வீடு அருளும் புருடோத்தமன் தண் வகுளத்-
    தொங்கல் பராங்குசன் தாளிணை மாலிருஞ்சோலை மலைச்-
    சங்கத் தழகர் அந்தாதி நடாத்தத் தலைக்கொள்வனே




    அங்கத் தமிழ் மறை ஆறு அங்கங்கங்கள் உடைய தமிழ் வேதம் ஆகிய
    ஆயிரம் பாடி அளித்து ஆயிரம் பாசுரங்களைப் பாடிக் கொடுத்து
    உலகோர் தங்கட்கு வீடு அருளும் உலகத்தார்க்கு முக்தியைக் கொடுக்கிறவரும் ,
    புருடோத்தமன் புருஷர்களில் உத்தமரும் ,
    தண் வகுளத் தொங்கல் குளிர்ந்த மகிழம் பூ மாலையைத் தரித்தவருமான
    பராங்குசன் தாள் இணை பராங்குசன் எனப் பெயர் பெற்ற நம்மாழ்வாருடைய திருவடிகளை
    மாலிருஞ்சோலை மலை திரு மாலிருஞ்சோலை மலையில் இருக்கும்
    சங்கத்து அழகர் தமிழ்ச் சங்கத் தலைவருமான அழகர் மீது பாடப்பட்ட
    அந்தாதி நடாத்த அந்தாதி என்னும் இந்த நூலை இடையூறு இன்றி நடத்த
    தலைக் கொள்வனே தலை மேற்கொண்டு வணங்குவேன்


    Last edited by sridharv1946; 30-08-13, 13:37.
Working...
X