3. அழகர் அந்தாதி- 001 / 100 மனமே ! மாலிருஞ்சோலை அழகனை எப்போதும் நினை !

நீர் ஆழி வண்ணனை பால் ஆழி நாதனை நின்மலனை
சீர் ஆழி அம் கைத் திருமகள் கேள்வனை தெய்வப் புள் ஊர்
கூர் ஆழி மாயனை மால் அலங்காரனை கொற்ற வெய்யோன்
ஓர் ஆழித் தேர் மறைத்தானை எஞ்ஞான்றும் உரை நெஞ்சமே !


ஆழி - கடல்
சீர் ஆழி - மோதிரம்
கூர் ஆழி - சுதர்சனம்
ஓர் ஆழி - சக்கரம்

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsநெஞ்சமே என் மனமே !
நீர் ஆழி வண்ணனை கடல் போன்ற நீல நிறம் கொண்டவனை ,
பால் ஆழி நாதனை பாற்கடலில் பள்ளி கொண்ட தலைவனை ,
நின்மலனை குற்றம் அற்றவனை ,
சீர் ஆழி அம கை சிறந்தமோதிரம் அணிந்த அழகிய கைகளை உடைய
திருமகள் கேள்வனை மகா லக்ஷ்மியின் கணவனை ,
தெய்வப் புள் ஊர் சிறந்த கருடன் மேல் பவனி வருபவனை ,
கூர் ஆழி மாயனை கூர்மையான சுதர்சனம் உடைய மாயங்கள் செய்பவனை ,
மால் அலங்காரனைதிரு மாலிருஞ்சோலை அழகனை ,
கொற்ற வெய்யோன் ஓர் ஆழித் தேர் வெற்றியுடைய சூரியனின் ஒற்றைச் சக்கரத் தேரை
மறைத்தானை பாரதப்போரில் மறைத்தவனை
எஞ்ஞான்றும் உரை எப்போதும் துதி செய்வாய் !