Announcement

Collapse
No announcement yet.

நம் செட்டிநாட்டு பழமொழி

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • நம் செட்டிநாட்டு பழமொழி

    நம் செட்டிநாட்டு பகுதிகளில் வழங்கப்படும் பழமொழிகளும் அதன் விளக்கமும் :



    "குடிக்கிறது கூழாம் கொப்பளிக்கிறது பன்னீராம்"
    என்பது பழமொழி.



    தேவைக்குத் துன்பப்பட்டுக் கொண்டு, ஆனால் வெளிப்பெருமைக்காகச் செயற்படும் தன்மையினை இது உணர்த்துகிறது. அடிப்படைத் தேவையை அறியாமல் செய்யும் ஆடம்பரத்தை வெளிப்படுத்துகிறது.




    "ஆற்றிலே கொட்டினாலும் அளந்து கொட்டனும்"
    என்ற பழமொழி.




    ஆறு பெரிதாக இருக்கிறதே என்பதற்காக அதிகமாகக் கொட்ட வேண்டியதில்லை. கொட்டுவதை அளந்தே கொட்டவேண்டும். எதையும் எண்ணிச் செலவு செய்ய வேண்டும். யாருக்குக் கொடுத்தாலும் அளவாகக் கொடுக்க வேண்டும். அதாவது இன்னதற்கு இவ்வளவுதான் செலவு செய்ய வேண்டும் என்பதைத்
    திட்டமிட்டுச் செய்ய வேண்டும்.


    "குந்தித்தின்றால் குன்றும் மாளும்", என்பது பொதுவான பழமொழி.


    முன்னோர்கள் வைத்துவிட்டுப் போன சொத்துக்களை உழைத்துப் பெருக்காமல் உட்கார்ந்து தின்றால் அது குன்றளவு இருந்தாலும் குறைவுபடும்.


    "முன்னோர்கள் ஆண்டதைப் பின்னோர்கள் ஆளனும்"


    உழைக்காமல் கரைத்ததால், குலத்தில் முன்னோர்கள் சேர்த்ததைத் தான் இருந்து ஆளமுடியாமல், இலம்பாட்டைப் பெற்றான். எனவே முன்னோர்கள் வைத்து ஆண்டவற்றை வீண் ஆடம்பாரத்தால் அழித்துவிடாமல் பின்னோர்கள் வைத்து ஆளவேண்டும்.


    "வீட்டில் இல்லாத பொருளைக் கேட்டுத் தொணக்காத" அல்லது "வீட்டில் இல்லாத பொருளைக் கேட்டு அழாதே"



    இது சிறுபிள்ளை முதல் மனதில் பதிய வைக்கப்படும் கருத்து. இல்லாததைக் கேட்டு அழுதால் அழுகைக்குப் பயந்து கடன்பட்டாவது கொடுக்க வேண்டிய கட்டாயம் வரும். தேவையற்ற கடன் தொல்லை வந்துசேரும். எனவே இருப்பதைக் கேட்டு அழுவதால் கொடுப்பவர்க்கும் துன்பமில்லை. பொருளைத் தேவைக்குத்தான் கேட்கவேண்டுமே தவிர வீணாகக் கேட்பது தவறு. இருப்பதை இன்பமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற பொருளில் இதே கருத்து வேறுவிதமாகக் கூறப்படுவதும் உண்டு.


    "இட்ட போசனத்தை இன்பமா சாப்பிடு"



    உள்ளதைக் கொண்டு திருப்தியடைந்தால் வாழ்வு இன்பமாக இருக்கும். இல்லாததற்கு ஏங்கி அழக்கூடாது என்பதை இப்பழமொழி தெளிவாகச் சுட்டுகிறது. வசதிக்குத் தக்கபடி வாழ வேண்டும் என்பதன் வெளிப்பாடே இப்பழமொழி.



    "ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம்; உள்ளே இருக்குமாம் ஈறும் பேனும்"


    வெளியே தாழம்பூ மணக்க இருக்கும் கொண்டை தன்னகத்தே பல அழுக்குகளைக் கொண்டிருக்கும். வெளிப்பகட்டாகவும், ஆடம்பரமாகவும், பேச்சளவிலும் நிற்பவர்களை இப்பழமொழி சுட்டிக்காட்டும்,

    "மதிப்புமசால் வடை பிச்சுப்பாத்தா ஊசவடை" என்ற பழமொழியும் இக்கருத்திலேயே வழங்குகின்றது.




    "நல்லபாம்பு ஆடுதுன்னு நாக்களாம் பூச்சி ஆடமுடியுமா" என்று கூறுவர் (நாக்களாம்பூச்சி - மண்புழு)


    அவனவன் தகுதிக்கேற்ப வாழும் வாழ்க்கையே நிம்மதியான வாழ்க்கை. செல்வந்தனின் வாழ்வுபோல் இல்லாதவனின் வாழ்வு அமைவதில்லை. இயன்றவன் செயல்களைப் போல் இயலாதவன் செயற்பட முடியாது. தோற்றத்தில் ஒரேமாதிரியாக இருந்தாலும் நல்லபாம்பைப் போல் மண்புழு ஆடமுடியாது.


    "பழமொழி பொய்யின்னாப் பழயதும் சுடும்"



    மக்களுக்குப் பழமொழியின் மீதுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது. சமுதாயத்தில், இதனைச் செய், இதனைச் செய்யாதே எனக் கட்டளையிடவும் பழமொழியைப் பயன்படுத்துகின்றனர்.



    "எண்ணிச் செய்கிறவன் செட்டி
    எண்ணாமல் செய்கிறவன் மட்டி"



    மக்களின் வாழ்வில் அனுபவித்த சாரம் என்பதால் மக்களிடையே அதற்கொரு செல்வாக்கு உண்டு. அம்முறையில் செட்டியார்கள் என்று அழைக்கப்பெறும். தன வணிகர்களாகிய நகரத்தார்கள் எதையும் எண்ணித் திட்டமிட்டுச் செய்பவர்கள்.






    "காசுக்கு எட்டுச் சட்டி வாங்கி"


    சட்டி ஒன்னு எட்டுக்காசுன்னு விற்றாலும்
    செட்டிப்பிள்ளை ஒன்றுக்கு ஈடாகுமா?
    என்ற வழக்கு செட்டியார்களின் கெட்டிக்காரத் தனத்திற்குச் சான்றாக விளங்குகிறது.









    Source:nagarathar
Working...
X