மீளா அடிமையிடம் (பிரதோஷம் மாமாவிடம்) அந்த வைஷ்ணவ அன்பர் சிரத்தையுடன் வந்து கொண்டிருந்தார். ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவாளை சாக்ஷாத் நாராயணன் என்றும், ஸ்வதர்மத்தை பிடித்துக் கொண்டு த்வாதச நாமத்தை போட்டுக் கொண்டு தான் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவாளை ஸ்ரீ ராம நவமி, ஸ்ரீ கிருஷ்ணஜயந்தி, ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி, ஏகாதசி அன்றெல்லாம் விடாமல் தரிசித்தே ஆகவேண்டும் என்று தீர்மானமாக கூறினார்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsஒரு நரசிம்ம ஜெயந்தி அன்று எழும்பூரில் அந்த அன்பர் வந்தபோது இன்று நரசிம்ம ஜெயந்தி ஆயிற்றே, மஹா பிரபுவை தரிசனம் செய்தாயோ என்று கேட்டபோது அந்த அன்பர் நரசிம்ம ஜெயந்தி என்பதே தெரியவில்லை என்றார். உடனே சென்று தரிசனம் செய் என மீளா அடிமை கூறினார்.

நேரமோ இரவு 10ஐ தாண்டிவிட்டது. அன்பர் பஸ்சிலும் லாரியிலுமாக காஞ்சிபுரம் பாலிடெக்னிக் அருகில் இறங்கினார். அங்கிருந்து கால்நடையாக 5 கீ மீ சென்று ஸ்ரீ மடத்தை அடைந்தார்.

நேரம் அதிகாலை 3 மணி. எதேச்சையாக யாரோ ஒருவர் வெளியில் வர மடத்தின் கதவுகள் திறந்தன. அன்பர் உள்ளே ஓடினார்.

மஹா பிரபு மேனாவில் இருக்கும் சமயம். அன்பர் நெருங்கும் போதே அதிசயம் நடந்தது. மேனாவின் கதவு திறந்தது.

மஹா பிரபு ஒரு பாதத்தை பூமியிலும் ஒரு பாதத்தை மடியிலும் வைத்துக்கொண்டு மேனாவின் விளிம்பில் அமர்ந்து, இரண்டு திருக்கரங்களையும் மடியில் வைத்துக் கொண்டு அன்பரை பார்த்து அமானுஷ்யமான சிரிப்பொன்றை உதிர்த்தார்.

அன்பருக்கு இது நிலைப்படியில் சாக்ஷாத் நரசிம்ம தரிசனமே என்று ஸ்புரிக்க கன்னத்தில் போட்டுக் கொண்டே 'மஹா ப்ரபோ, நரசிம்ம பெரியவா' என்று இரைந்து சொல்லி வந்தனம் செய்தார். ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவாள் மேனாவைத் தொட்டவுடன் எழுந்துவிடும் கைங்கர்யம் செய்யும் அன்பர்கள் ஏனோ அன்று உறக்கம் கலையாமல் வைஷ்ணவ அன்பரின் தரிசனத்திற்கு பிறகே எழுந்து கொள்ள ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவாள் காட்சியை மாற்றி சாதாரணமாக தர்சனம் தந்தார். மாய கிருஷ்ணன் அல்லவா?

அடிமையின் கூற்றுக்கு, வைஷ்ணவ அன்பரின் சிரத்தைக்கு இந்த...விசேஷ நரசிம்ம தரிசனம்.

குறிப்பு: மீளா அடிமை ஸ்ரீ பிரதோஷம் வெங்கட்ராமன் மாமா அவர்கள் அனுபவங்கள் பற்றிய தொகுப்பான 'தந்தது உன் தன்னை, கொண்டது என் தன்னை' என்று புத்தகத்திலிருந்து...
Jaya Jaya Shankara, Hara Hara Shankara


Source: Pdfiva forum