தாணுமாலயன் கோவில்-சுசீந்திரம்


Click image for larger version. 

Name:	Danu.jpg 
Views:	5 
Size:	66.1 KB 
ID:	1128

சுசீந்திரம் தமிழகத்தின் மிக புகழ் பெற்ற கோவில்களில் ஒன்று. கன்யாகுமரி மற்றும் நாகர்கோவிலுக்கு இடையே 4 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

தாணுமாலயன் கோவில் என்று இதனை சொல்கிறார்கள். தாணு என்றால் சிவன்; மால் - பெருமாள் ;

பிரம்மா - சிவன்- பெருமாள் என மூவரும் இணைந்து இருக்கும் கோவில் இது !

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsஅகலிகை மேல் இந்திரன் காதல் கொள்ள, அதனால் சாபம் பெற்று மிக துயருகிறார். பின் பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் ஒன்றாக இந்திரனுக்கு பாவ விமோசனம் இங்கு தான் தந்தனர் என்று நம்பப்படுகிறது. (ஊரின் பெயரிலேயே இந்திரனுக்கு இடமுண்டு கவனித்தீர்களா?)

25க்கும் மேற்பட்ட சந்நிதிகள் உள்ளன. மூலவர் திருவேங்கடம் விஷ்ணுவரம் பெருமாள். விக்னேஸ்வரி - மேலே பெண்ணாகவும் கீழே ஆணாகவும் இருக்கும் பிள்ளையார்.

நீல கண்ட விநாயகர் - என்கிற இன்னொரு கடவுளும் மிக விசேஷமானவர். சிவன் ரூபத்தில் இருக்கும் பிள்ளையார் இவர் என்கிறார்கள்

பல இடங்களில் தமிழில் அர்ச்சனை நடப்பதை காண முடிந்தது

விளக்கு பரிகாரம் என்பது இங்கு நிறையவே நடக்கிறது. பலரும் 9 முதல் 108 விளக்குகள் வைத்து பரிகாரம் செய்கிறார்கள். நவகிரக மூர்த்திகள் மேலே விளக்குடன் சுற்றி வருவதாக ஒரு ஐதீகம் 12 நட்சத்திரத்தை சேர்ந்தவர்களும் இங்கு பரிகாரம் செய்ய வருகிறார்கள்.

யாழி வரிகள் ,பூத வரிகள் வழக்கமாக கோவில்களில் நீங்கள் பார்த்திருப்பீர்கள் சிங்கம் முழு தோற்றத்துடன் இது போன்று சில கோவில்களிலேயே அமைக்கப்பட்டுள்ளன.

http://veeduthirumbal.blogspot.com/2013/04/blog-post_17.html

Picture: Tamil Temples