3. அழகர் அந்தாதி- 005/100 அழகர்க்கு ஆட்பட்ட பின் கவலை இல்லை !

புரந்தரன் ஆம் எனப் பூபதியாகி புகர்முகமாத்-
துரந்தரசு ஆளில் என் , நல்குரவு ஆகில் என் - தொல் புவிக்கு
வரந்தர மாலிருஞ்சோலை மலை நின்றார்க்கு என் மனத்தினுள்ளே
நிரந்தரமாய் அலங்காரர்க்கு இங்கு ஆட்பட்டு நின்ற பின்னே

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsபதவுரை : புரந்தரன்
துரந்து + அரசு
வரம் + தர
நிரந்தரமாய்

தொல் புவிக்கு வரம் தர பழமையான உலகோர்க்கு வரம் கொடுக்க
மாலிருஞ்சோலை நின்றார்க்கு திரு மாலிருஞ்சோலையில் இருப்பவரான
அலங்காரர்க்கு அழகர் பிரானுக்கு
நிரந்தரமாய் என் மனத்தினுள்ளே இடைவிடாமல் மனப்பூர்வமாக
இங்கு ஆட்பட்டு நின்றபின்னே இம்மையில் அடிமையாகி நின்ற பிறகு
புரந்தரன் ஆம் என இந்திரனே ஆவான் என்று சொல்லும்படி
பூபதி ஆகி அரசன் ஆகி
புகர் முகமாத் துரந்து செம்புள்ளிகளை முகத்தில் உடைய பட்டத்து யானையின் மீதேறி
அரசு ஆளில் என் அரசாண்டால் என்ன ?
நல்குரவு ஆகில் என் வறுமைப் பட்டால் என்ன ?