Announcement

Collapse
No announcement yet.

3. அழகர் அந்தாதி - 010/100 மாலலங்காரனை ஏத்த நீங்கு

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 3. அழகர் அந்தாதி - 010/100 மாலலங்காரனை ஏத்த நீங்கு

    3. அழகர் அந்தாதி - 010/100 மாலலங்காரனை ஏத்த நீங்கும் இருவினையே !

    செய்தவராக வருந்தியும் தீர்த்தத்துறை படிந்துங்-
    கைதவராகமம் கற்றுமென்னாம் கடற்பார்மருப்பிற்-
    பெய்தவராகனை மாலலங்காரனைப் பேரிலங்கை-
    யெய்தவராகவவென்றுஏத்த நீங்கும் இருவினையே



    பதவுரை
    : செய் + தவர் + ஆக

    கைதவர் + ஆகமம்
    பெய்த + வராகனை
    யெய்தவ + ராகவ

    செய் தவர் ஆக வருந்தியும் தவம் செய்து கஷ்டப்பட்டும் ,
    தீர்த்தத் துறை படிந்தும் புண்ய தீர்த்தங்களில் நீராடியும் ,
    கைதவர் ஆகமம் கற்றும் வஞ்சகப் பிற மதங்களின் ஆகமங்களை ஓதி உணர்ந்தும்
    என் ஆம் என்ன பயன் ?
    கடல் பார் மருப்பில் பெய்த கடல் சூழ்ந்த பூமியை கோட்டில் ஏந்திய
    வராகனை மால் அலங்காரனை வராஹன் ஆன பெருமையுள்ள அழகனை
    பேர் இலங்கை எய்தவ ராகவ பெரிய இலங்கை மீது அம்பு எய்தவனே ! ராகவனே !
    என்று ஏத்த என்று துதித்தால்
    இரு வினை நீங்கும் நல் வினை தீவினை இரண்டும் விலகும்

    Last edited by sridharv1946; 03-09-13, 12:08.
Working...
X