டாக்டர்.இராசா சர் அண்ணாமலை செட்டியார்


Click image for larger version. 

Name:	Annamalai.jpg 
Views:	6 
Size:	43.4 KB 
ID:	1134

டாக்டர்.இராசா சர் அண்ணாமலை செட்டியார் அவர்களின் இயற்பெயர் சாத்தப்ப ராமநாத முத்தையா அண்ணாமலை என்பதாகும். இவர் 1881 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 30 ஆம் நாள் பிறந்தார். இவரது கல்வித் தொண்டும் சமூக சேவையும் கொடைப் பண்பும் நகரத்தார் மத்தியில் இவர் புகழ்பெறக் காரணமாக இருந்தன.. இவர் 1929 ஆம் ஆண்டு சிதம்பரத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை நிறுவினார். இவரே இந்தியன் வங்கியின் நிறுவனரும் முதல் செயலாளரும் ஆவார்.

1923 ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசு இவருக்குத் திவான் பஹதூர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. 1929 இல் ஆங்கிலேய அரசு இவரைச் செட்டிநாட்டு அரசர் எனக் கௌரவித்தது.

கானாடுகாத்தான் புகைவண்டி நிலையத்தினுள் இவருக்குச் சொந்தமான பங்களா ஒன்று உள்ளது. அவர் புகைவண்டியில் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் வசதியாக அந்த பங்களாவின் முன் அவர் பயணம் செய்யும் பெட்டி நின்று செல்லும் அளவிற்குப் பெரும் புகழுடன் திகழ்ந்தார்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
Source: nagarathar