3. அழகர் அந்தாதி- 016/100 கருங்கண்ணிக்குக் கண்ணனிடம் கண்ணி கேளீர் !

அழக்கன்றிய கருங்கண்ணிக்குக் கண்ணி யளித்திலரேல்
வழக்கன்றி முன்கொண்டவால்வளை கேளு மறுத்ததுண்டேற்-
குழக்கன்றின் பின் குழலூதலங்காரர்க்குக் கோதை நல்லீர்
சழக்கன்றில் வாய் பிளந்தாலுய்யலாமென்று சாற்றுமினே

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsபதவுரை : அழ + கன்றிய
வழக்கு + அன்றி
குழ + கன்றின்
சழக்கு + அன்றில்

கோதை நல்லீர் பூ மாலை போன்ற மெல்லிய மாதர்களே !
அழக் கன்றிய அழகரைப் பிரிந்து வாடி அழுததால் கன்றிப்போன
கருங்கண்ணிக்கு கரிய கண்ணுடைய இப்பெண்ணிற்கு
கண்ணி அளித்திலரேல் அழகர் தமது மாலையைத் தராவிட்டால்
வழக்கு அன்றி முன் கொண்ட அநியாயமாக முன்பு அவர் இவளிடமிருந்து கவர்ந்து கொண்ட
வால் வளை கேளும் அழகிய வளைகளைக் கேளுங்கள்
மறுத்தது உண்டேல் அவர் தர மறுத்தால்
குழக் கன்றின் பின்இளமையான கன்றுகளின் பின்னே
குழல் ஊது அலங்காரர்க்கு கண்ணனாக புல்லாங்குழலை ஊதிச் சென்ற அழகர் பிரானிடம்
சழக்கு அன்றில் "குற்றத்தை உடைய அன்றில் பறவையின்
வாய் பிளந்தால் வாயைக் கிழித்தால் தான் ( அதன் சோகக் குரலைக் கேட்காமல் )
உய்யல் ஆம் இவள் பிழைப்பாள்"
என்று சாற்றுமின் என்று சொல்லுங்கள்