Announcement

Collapse
No announcement yet.

3. அழகர் அந்தாதி - 021/100 அழகனை அல்லால் அந்நியனை ந

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 3. அழகர் அந்தாதி - 021/100 அழகனை அல்லால் அந்நியனை ந

    3. அழகர் அந்தாதி- 021/100 அழகனை அல்லால் அந்நியனை நினையேன் !

    இருக்கந்தரத்தனைவோர்களும் ஓதி இடபகிரி
    நெருக்கந்தரத்தனை ஏத்த நின்றானை நிறத்த துப்பின்
    உருக்கந்தரத்தனைத துன்பு ஒழித்தானை உலகம் உண்ட
    திருக்கந்தரத்தனை அல்லாது எண்ணேன் ஒரு தெய்வத்தையே

    பதவுரை : இருக்கு + அந்தரத்து
    நெருக்கம் + தர + தனை
    உரு + கந்தர் + அத்தனை
    திரு + கந்தரத்தனை


    அந்தரத்து அனைவோரும் தேவ லோகத்தில் உள்ள எல்லா தேவர்களும்
    இருக்கு ஓத ரிக் முதலிய வேதங்களை சொல்லி
    இடப கிரி நெருக்கம் தர திரு மாலிருஞ்சோலையில் நெருக்கம் உண்டாகுமாறு
    தனை ஏத்த நின்றானை தன்னைத் துதிக்க , அதை ஏற்று நின்றவனும்
    நிறத்த துப்பின் உரு சிவந்த பவழம் போல் உருவம் உடைய
    கந்தர் அத்தனை முருகன் தந்தையான சிவனுடைய
    துன்பு ஒழித்தானை இரத்தல் துன்பத்தை நீக்கியவனும்
    உலகம் உண்ட உலகங்களை உட்கொண்டவனும்
    திருக் கந்தரத்தானை அல்லால் அழகிய கழுத்து உடையவனுமான நாராயணனைத் தவிர
    ஒரு தெய்வத்தை எண்ணேன் வேறு ஒரு தெய்வத்தை நினைக்க மாட்டேன்


    Last edited by sridharv1946; 05-09-13, 14:15.
Working...
X