Announcement

Collapse
No announcement yet.

Teacher's day 5 th September

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Teacher's day 5 th September

    Teacher's Day


    In India 5th September is celebrated as Teachers Day as a mark of tribute to the contribution made by teachers to the society.

    5th September is the birthday of a great teacher Dr. Sarvepalli Radhakrishnan, who was a staunch believer of education, and was the well-known diplomat, scholar, President of India and above all, a teacher.

    Click image for larger version

Name:	Radha.jpg
Views:	1
Size:	1.9 KB
ID:	35061

    When some of his students and friends approached him and requested him to allow them to celebrate his birthday, he said, "instead of celebrating my birthday separately, it would be my proud privilege, if 5th September is observed as Teachers day". From then onwards, the 5th of September has been observed as Teachers Day, in India.



    நம் தமிழக மக்கள் ஒவ்வொருவருக்கும் தேசிய உணர்வை
    ஊட்டிய "செக்கிழுத்த செம்மல்"எனும் பன்முகத் தன்மை கொண்ட வ.ஊ.சிதம்பரம் பிள்ளை அவர்களின்
    பிறந்த நாள் இன்று.

    Click image for larger version

Name:	Chidambaram Pillay.jpg
Views:	1
Size:	26.8 KB
ID:	35062


    Source: nagarathar
    Dr.Radhakrishnan Image from Google,
    http://education.oneindia.in/news/2013/09/04/why-we-celebrate-teachers-day-on-5th-september-006376.html

  • #2
    Re: Teacher's day 5 th September

    தங்களினனிந்த போஸ்ட் படிக்கும் வரை செப்டம்பர் 5 என்றால் சர்வ பள்ளியார் தானென் நினைவிற்கு வருவார் செக்கிழுத்த செம்மலாருமினியென்நினைவில்வருவார் நன்றி. அன்னை தெரசா அவர்களின் நினைவு தினமும் இன்று தான் என்பதையும் நினைவுகூர்கிறேன்
    Last edited by soundararajan50; 05-09-13, 20:01. Reason: விட்டுப்போன செய்தி இணைக்க

    Comment


    • #3
      Re: Teacher's day 5 th September

      Sri.soundararajan Sir

      Thanks for your comments; what we are today is due to our School Teachers who taught us without expecting anything in return.

      I studied mostly in Corporation Schools and ordinary Schools, but the Teachers were very Good.

      Regards

      Padmanabhan.J

      Comment


      • #4
        Re: Teacher's day 5 th September

        சார் நாமெல்லாம் மிக அதிர்ஷ்டம் செய்தவர்கள் காரணம் ந்மது பள்ளி பருவ டெடிகேடட் ஆசிரியர்களை ந்மது ஆசன்களாகப் பெற்றதற்கு

        Comment


        • #5
          Re: Teacher's day 5 th September

          எனது பள்ளிப்பருவம் :

          ஆசிரியர் தினத்தன்று (5.9.2013)என்னைஆளாக்கியஆசிரியபெரியோர்களுக்கு சாஷ்டாங்க நமஸ்காரங்கள் .

          அந்தக்காலந்தில் சரஸ்வதி பூஜை கழிந்து விஜய தசமி யன்று வித்யாப்யாசம் செய்து பள்ளியில் சேர்ப்பது வழக்கம் .ஆனால் என்னை பள்ளியில் சேர்ப்பதற்கு வேறொரு முக்கிய காரணம். வீட்டில் எனது விஷமங்களை சமாளிக்க முடியாமல் எனது தாயார் எங்கள் வீட்டில் ஒரு பகுதியில் குடியிருந்த எலிமெண்டரி பள்ளி வாத்தியார் ராமநாத அய்யரிடம் கேட்டு என்னை பள்ளியில் சேர்த்தார். பள்ளி எங்கள் வீட்டுக்கு அருகில், நடக்கும் தூரத்தில் இருந்தது. வயது குறைவாக இருந்ததினால் எனது வயதில் ஒரு வருடத்தைக்கூட்டி பதிவுசெய்து விட்டார் எனது தாயார்.. தினமும் வாத்தியாருடன் பள்ளி சென்று வருவேன் . ஆனால் எனக்கு படிப்பைவிட விளையாட்டிலேயே நாட்டமிருந்ததால் பல நாட்கள் பாதி வகுப்பிலிருந்து வீட்டுக்கு திரும்பிவிடுவேன் . எங்கள் பள்ளி (கோவை)ஆர் எஸ் புரம் முனிசிபல் எலிமெண்டரி ஸ்கூல் என்ற பள்ளி. மங்களூர் ஒட்டு கூரை யுடன் கூடிய நேர்த்தியான கட்டிடம், நாலு ஏக்கருக்குமேல் விளையாட மைதானம். இலவச கல்வி. காலையில் முதலில் பள்ளியில் எல்லா மாணவர்களும் வரிசையாக நின்று "கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே" என்ற திரு அருட்பாவுடன் கடவுள் வாழ்த்து பாட்டு பாடுவோம். இங்கேதான் மகாகவி பாரதியாரின் பாட்டுக்களை நான் கற்றறிந்தேன் . எனக்கு பிடித்த பாட்டு மகாகவியின் "பாரத சமுதாயம் வாழ்கவே "என்ற கவிதை தான். பள்ளியின் "பெரிய வாத்தியார்" சிங்காரவேலு முதலியார் , நல்ல மனிதர். இப்பள்ளியே சில வரு டங்களுக்குப்பின் எட்டாம் வகுப்புகளுடன் நடுநிலைப் பள்ளியாக மாறியது . பிறகு ஆர். எஸ். புரத்திலேயே குமாரசாமி ஏரிக்கு அருகில் புதிதாக கட்டப்பட்ட பெரிய கட்டிடத்தில் மேநிலைப் பள்ளியாக மாறியது. நான் இப்பள்ளியிலேயே படித்து அதனுடன் வளர்ந்து வந்தேன் .


          மேநிலைப் பள்ளியின் ஹெட் மாஸ்டர் கோவிந்தாச்சாரி,மிகவும் கண்டிப்பானவர் . அதிகம் பேச மாட்டார் . காலை இரண்டாவது மணி அடித்தவுடன் கைகளை பின்புறம் கட்டிக்கொண்டு பிரம்புடன் பள்ளி முழுவதிலும் சுற்றி வருவார் .பள்ளி தாழ்வாரத்தில் ஒருவரும் இருக்கக்கூடாது என்பது அவரது கண்டிப்பு. அவருடன் பல புதிய ஆசிரியர்கள் சிட்டி முனிசிபல்மே நிலைப் பள்ளியி லிருந்து மாற்றப்பட்டனர் அவர்களில் ஸ்ரீநிவாச அய்யர், நடேச அய்யர், கௌரி அம்மாள் ஜான் வாத்தியார், வெங்கடேச அய்யர், நாராயணசாமி நாயுடு என்பவர்கள் எனது ஆசிரியர்களாக இருந்தவர்கள்.திறமை மிக்க இவ்வாசிரியர்கள் யாவரும் பிற்பாடு புதிதாக ஆரம்பித்த பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்களாக மாற்றப்பட்டது ஒரு சிறப்பான நிகழ்வு . ஸ்ரீ நிவசரகவாச்சர்யர் எனது சம்ஸ்க்ருத ஆசிரியர் .அந்த நாட்களில் ஹிந்தி மற்றும் தக்கிளியில் நூல் நூற்பது என்று இருவகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன . இவை கட்டயப்பாடங்கள் (Compulsory subjects) என்று அழைக்கப்பட்டன .ஆனால் இவையிரண்டும் தேர்வுக்கு அவசியமில்லை யாகையால் மாணவர்கள் யாரும் அதிக கவனம் செல்லுத்தவில்லை. அன்றைய ஆசிரியர்கள் யாவரும் பள்ளிக்கு மிகவும் கவனமாக உடை உடுத்திக்கொண்டு வருவார்கள் . பெரியவாத்தியார் மற்றும் இதர ஆசிரியர்கள் யாவரும் தலையில் டர்பன் (தலைப்பாகை ) அல்லது தொப்பி தரித்து கச்சை வேஷ்டியுடனோ அல்லது முழு சூட்டுடனோ தான் வருவார்கள் .எங்கள் டிராயிங் ஆசிரியர் எல்லா காலங்களிலும் கம்பளி கோட் அணிந்தது வருவார் ஆகவே மாணவர்கள் அவருக்கு "கம்பளி ராயர்" என்று பட்டப்பெயர் அளித்திருந்தனர்.

          அது ஓர் ஆனந்தமான காலம்.

          எனது வாழ்கையில் ஓர் ஆச்சர்யமான நிகழ்வு என்னவென்றால் , நான் மேநிலை ப்பள்ளி யில் படித்துக்கொண்டிருக்கும்போது பள்ளியின் 25 ஆண்டு வெள்ளி விழா நடந்தது , மதுரை கல்லூரியில் intermediate படித்தபோது கல்லூரியின் 60 ஆண்டு வைரவிழா நடந்தது , பிறகு கோவை அரசினர்கல்லூரியில் B .Com படித்தபோது அக்கலூரியின் 100 ஆண்டு விழா நடந்தது.


          ப்ரஹ்மண்யன்,
          பெங்களூரு .





          Comment


          • #6
            Re: Teacher's day 5 th September

            தங்கள் பள்ளிப் பருவ அனுபவங்கள் சுவையோசுவை சார்

            Comment


            • #7
              Re: Teacher's day 5 th September

              நண்பர் ஸ்ரீ சௌந்தர ராஜன் அவர்களுக்கு,

              பள்ளிப் பருவம் நம் யாவருக்கும் சுவையானதொரு அனுபவம் . நினைத்துப்பார்த்தால் எவ்வளவு மகிழ்ச்சி நிறைந்த நிகழ்சிகளைக் கடந்து வந்திருக்கிறோம். அந்தநாட்களில நம்மை அறிவுபூர்வமான மனிதர்களாக்க நமது ஆசான்கள் எவ்வளவு முயற்சி எடுத்துள்ளார்கள். அந்த நல்லவர்களுக்கு நாம் என்ன பதில் மரியாதை செய்துள்ளோம் ? பலருக்கு அவர்கள் பெயர் கூட நினைவிலிருக்காது. பல நண்பர்களை அப்பருவத்தில் பெற்றிருந்தோம் .
              அது ஓர் அற்புதமான காலம் எப்படி மறக்க முடியும்.

              தங்கள் நலம் கோரும்,
              ப்ரஹ்மண்யன்,
              பெங்களூரு .

              Comment

              Working...
              X