Announcement

Collapse
No announcement yet.

3. அழகர் அந்தாதி - 022/100 போத நல்லோர் சோலை மலைக் கொ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 3. அழகர் அந்தாதி - 022/100 போத நல்லோர் சோலை மலைக் கொ

    3. அழகர் அந்தாதி- 022/100 போத நல்லோர் சோலை மலைக் கொண்டலையே ஓதி உணர்வர்

    தெய்வம்பல அவர் நூலும் பல அவை தேர்பொழுதிற்-
    பொய்வம்பல என்று தோன்றும் புல்லோர்கட்குப் போத நல்லோ-
    ருய்வம்பலனும் அவனே என்று ஓதி உணர்வர் நெஞ்சே
    கொய்வம்பலர் சொரியும் சோலை மா மலைக் கொண்டலையே




    பதவுரை : தெய்வம் + பல
    பொய் + வம்பு + அல
    உய்வம் + பலனும்
    கொய் + வம்பு + அலர்


    நெஞ்சே மனமே !
    தெய்வம் பல "தெய்வங்கள் பல உண்டு
    அவர் நூலும் பல அவர்களது ஆகமங்களும் பல உண்டு
    தேர் பொழுதில் ஆராயும்போது

    அவை பொய் வம்பு அல என்று அந்நூல்கள் பொய்யும் பயன் அற்றவையும் அல்ல" என்று
    புல்லோர்களுக்கு தோன்றும் அற்பர்களுக்கு தோன்றும்
    போதம் நல்லோர் ஞானத்தை உடைய நல்லவர்கள்
    உய்வம் பலனும் அவனே என்று "நன்கு வாழ்வோம் , பயனும் அழகனே" என்று எண்ணி
    கொய் வம்பு அலர் சொரியும்விரும்பிப் பறிக்கத் தக்க மணம் உள்ள மலர்கள் சிந்தும்
    சோலை மா மலை திரு மாலிருஞ்சோலையில் இருக்கும்
    கொண்டலையே நீர் கொண்ட மேகம் போன்ற அழகனையே
    ஓதி உணர்வர் துதித்து தியானிப்பார்கள்
    Last edited by sridharv1946; 05-09-13, 20:29.
Working...
X