Announcement

Collapse
No announcement yet.

கலை நிறை கணபதி சரணம் சரணம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கலை நிறை கணபதி சரணம் சரணம்

    கலை நிறை கணபதி சரணம் சரணம்

    Click image for larger version

Name:	Nirai Ganapathy.jpg
Views:	1
Size:	5.5 KB
ID:	35087



    வாக்குண்டாம்! நல்ல மனமுண்டாம்!.... மேனி நுடங்காது'' எனப் பிள்ளையார் வழிபாட்டின் பெருமையை ஒளவை புலப்படுத்துகிறார். இப்பாட்டில் மனம், வாக்கு, காயம் மூன்றையும் முறைப்படுத்துவது ஆனைமுகன் வழிபாடே என சொல்வதற்குக் காரணம் எல்லா தெய்வ சந்நிதானங்களுக்கு முன்பும் நாம் கும்பிடு மட்டுமே போடுகிறோம். முதல் தெய்வமான கணேசருக்குத்தான் இரண்டு கூடுதல் வழிபாடு. குட்டிக்கொள்வது, தோப்புக் கரணம் போடுவது.

    இப்படி மூன்று வழிபாடும் உடம்பால் செய்வதால் ஆரோக்கியம் பெருகி மேனி நுடங்காமல் நலம் பெறுகிறது. கண்புருவ முடிவும், நெற்றியும் சேரும் இடத்தில் "டெம்பரல் லோப்ஸ்' சுரப்பிகள் உள்ளன. இடம் உள்ள சுரப்பி தெளிவான பேச்சுக்கும், வலச் சுரப்பி குழப்பமற்ற மனதிற்கும் காரணமாக அமைகின்றன. காதுகளை பிடித்தபடி உட்கார்ந்து எழுந்திருப்பது வாழ்நாளை நீட்டிக்கிறது. மனம், வாக்கு, காயம் மூன்றையும் மேன்மையுறச் செய்கிறார் முதல் தெய்வமான பிள்ளையார்.

    கணேசர் வடிவத்தைக் கவனியுங்கள். விநாயகர் தலை, யானைத் தலை. அது மிருகக் கூறு. ஒற்றைத் தந்தம் உடைய பக்கம் ஆண். தந்தம் இல்லாத பக்கம் பெண். (பெண் யானைக்கு தந்தம் கிடையாது). ஐந்து கரங்கள் தெய்வ லட்சணம். குறுகிய கால்களும், பெருத்த வயிறும் பூத அம்சம். எனவே பூதமாய், தேவராய், விலங்காய், ஆணாய், பெண்ணாய் உயர்திணையாய் அஃறிணையாய் தோற்றம் அருள்பவரே விநாயகர். எனவே அனைத்துயிரும் வாழ அருள்க என வேண்டுகிறார் விநாயகர் நான்மணிமாலையில் பாரதியார்.

    "கைத்தல நிறைகனி அப்பமொடு அவல் பொரி கப்பிய கரிமுகன்' என திருப்புகழ் முதற்பாட்டில் அருணகிரியார் கணபதியைப் போற்றுகிறார். சாப்பிடுவதில் ஒருவர் பெரிய சமர்த்தர் என்றால் அது என்ன பெருமையா? எனக் கேட்கலாம். "வாக்கிற்கு அருணகிரி' என புலவர்களாலேயே போற்றப்பட்டவர் விநாயகர் நிவேதனப் பட்டியலை பாட்டியலில் சொன்னால் அதில் ஒரு விசேஷம் இருக்கும் என நாம் விளங்கிக் கொள்ளலாம். உணவே நல்ல உணர்வைத் தருகிறது என்கிறார் கீதையில் கண்ணபெருமான். ரஜோ குணங்களையும் தமோ குணங்களையும் உடையவற்றை அதிகம் சாப்பிட்டால் கோபம், காமம், தூக்கம், சோம்பல் மிகுதியாகும். பிள்ளையார் நிவேதனங்கள் சத்வ குண ஆகாரங்கள். மிகப்பெரிய விலங்காகவும் அதே சமயம் அமைதியாகவும், நாம் சொன்னதைக் கேட்பதாகவும் யானை விளங்குவது தாவர உணவை உட்கொள்வதால்தானே! யானை முகக் கடவுளுக்கு சத்வ குண நிவேதனங்கள் படைப்போம். பிறகு அதை உண்ணப்போவது பக்தர்களாகிய நாம்தானே! நாம் நலம் பெறவே விநாயகருக்கு பெரிய உணவுப் படையல்.

    "கலை நிறை கணபதி சரணம் சரணம்

    கஜமுக குணநிதி சரணம் சரணம்''

    என இராமலிங்க அடிகளார் பாடுகிறார்.

    களி மண்ணில், மஞ்சள் தூளில், சந்தனத்தில், ஏன் சாணத்தில் பிடித்து வைத்தால்கூட வரம் அருளும் மூர்த்தியாக வந்து விடுகிறார் பிள்ளையார். அதனால்தான் "பிடித்து வைத்தால் பிள்ளையார் (வடிவம்கூட முக்கியமில்லை)' எனச் சொல்கிறோம். கோயிலோ, கோபுரமோ, விதானமோ கூடத் தேவையில்லை. வெயிலிலும், மழையிலும் இருந்தபடியே பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் கருணை வள்ளலாக கணபதி விளங்குகிறார். மேலும் பூகூட வேண்டாம்,புல்லே போதும் என அருகம்புல் அர்ச்சனையில் மகிழ்கிறார் குணநிதியாகிய கணபதி.

    "முதா கராத்த மோதகம்

    ஸதாவி முக்தி சாதகம்'

    என்கிறார் ஆதிசங்கரர்.

    "மோதகம் படைத்தால் முக்தி அருள்வார்' என்கிறார் ஆதிசங்கரர். பரிபூரண சரணாகதியே முக்திக்கு வழி என்பதைத்தான் ஆதிசங்கரர் அப்படிக் குறிப்பிடுகிறார். "மோதகம்' என்னும் கொழுக்கட்டையிலேயே அந்தக் குறிப்பு இருக்கிறது. அரிசி மாவில் சொப்பு போல செய்கிறோமே அது உடம்பைக் குறிக்கிறது. உள்ளே வெல்லத்தில் பூரணம் வைக்கிறோமே அது ஆத்மாவைக் குறிக்கிறது. இரண்டும் சேர்ந்த மோதக நிவேதனம் உடம்பு, ஆன்மா ஒருசேர பிள்ளையாரிடம் ஒப்புவிக்கிறோம் என்பதைத்தானே காட்டுகிறது. போதகம் என்றால் தமிழில் யானை. போதகம் முன்பு மோதகம் வைத்து பிள்ளையார் சதுர்த்தியில் வழிபடுவோம். நம் பாதகம் அனைத்தும் நீங்கி சாதகம் ஆகும்.

    SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM


    Dinamani -Vellimalar


    Source:radha

    picture source: Google
Working...
X