தர்மம் வளர்க்கும் தீபங்கள


* அவரவர் தேவைகளைக் குறைத்துக் கொண்டு, மனசினால் நிறைந்து, சுபிட்சமாக இருக்க வேண்டும். வசதி உள்ளவர்கள் கூட எளிய வாழ்க்கை நடத்துவது அவர்களுக்கும் நல்லது, மற்ற ஜன சமூகத்துக்கும் நல்லது.

* பெண்கள் தர்மத்தை வளர்க்கிற தீபங்களாக உள்ளனர். இவர்களின் பண்பு கெடுகிறதற்கு இடம் தரக்கூடாது.

* இன்றைய தலைறையினருக்கு தர்மத்தை ஏற்கும்படியாக, நாம் சரித்திரத்தை குழைத்துக் கொடுத்தால் தான் அது நம்மை நல்வழிப்படுத்த உபயோகமாகும். புராணம் இதைச் செய்வதால் இவற்றை நாம் படிக்க வேண்டும்.
* "இளைமையில் கல்' என்று சொல்வார்கள், ஆகவே ஒருவன் இளம் வயதில் கல்வி கற்பது மிகவும் அவசியம்.

* உடல் பலம், அஹிம்சை, தைரியம் இவற்றோடு பிறருக்கு உதவும் மனப்பான்மையும் ஒருவருக்கு வேண்டும்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends* தர்மத்துக்கு ஆபத்து வந்தால் உயிரையும் கொடுத்து காப்பாற்றுவது தான் ஒரு நல்ல இளைஞனின் கடமை.

* ஆயிரங்காலத்துப் பயிரான திருமணத்தை, வரதட்சணை என்னும் பூச்சி அழிக்கின்ற வகையில் உள்ளது.

-காஞ்சிப்பெரியவர்SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
Source:Radha