Announcement

Collapse
No announcement yet.

Maha Periyava and Children

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Maha Periyava and Children

    Maha Periyava and Children





    சென்னை ஸம்ஸ்கிருதக் கல்லூரியில் ஸ்ரீசரணர் முகாமிட்டிருக்கிறார். ஒரு சிறிய பெண் அவரிடம் ஸ்ரீராமநாமம் எழுதிய நோட்டுப் புத்தகத்தை ஸமர்ப்பித்து வெள்ளிக் காசு கேட்டது.

    ஒரு லக்ஷம் நாமம் எழுதினால் பொற்காசும், அதில் எட்டில் ஒரு பங்கான 12,500 நாமம் எழுதினால் வெள்ளிக்காசும் ஸ்ரீசரணர் வழங்கி வந்த காலம் அது.

    சிறுமி கேட்டவுடன் பெரியவாள் வெள்ளிக் காசு கொண்டுவரச் சொல்லி அதற்கு ஈந்தார்.

    சிரித்துக் கொண்டு காசுடன் ஓடிய சிறுமி சிறிது நேரத்திலேயே கண்ணைக் கசக்கிக்கொண்டு திரும்பி வந்தது.

    “ஏம்மா அழறே?” என்று பரிவுடன் கேட்டார் ஸ்ரீசரணர்.

    “காசு எப்படியோ காணாமப் போயிடுத்து” என்று விக்கிற்று குழந்தை.

    ”அழாதேம்மா!” என்று கனிந்து சொன்ன பெரியவாள், “அது ஸரி, நீ எவ்வளவு நாமம் எழுதியிருந்தே?” என்று கேட்டார்.

    “8,500” என்றது குழந்தை.

    “12,500 எழுதினாதான் காசு தரதுன்னு ஒனக்குத் தெரியுமோன்னோ?”

    “தெரியும், தெரிஞ்சேதான் பொய் பண்ணிட்டேன். தப்புதான். மன்னிச்சுடுங்கோ!”

    சின்னஞ்சிறுமி தவற்றை ஒப்புக்கொண்டு மன்னிப்பு வேண்டியதில் ஸ்ரீசரணரின் மனம் உருகிவிட்டது!

    “பரவாயில்லேம்மா! இனிமே அப்படிப் பண்ணாட்டா ஸரிதான். இப்படி ஒக்காரு” என்று பிரியமாகச் சிறுமியை அருகே உட்கார்த்தி வைத்துக் கொண்டார்.

    அருகே இருந்தவர்களைப் பார்த்து, “நீங்க எல்லாரும் இப்பவே ராம நாமா எழுதி ஸொச்சம் நாலாயிரத்தையும் ‘கம்ப்ளீட்’ பண்ணுங்கோ. இந்தக் கொழந்தையும் எழுதட்டும். நீங்கள்ளாமும் எழுதுங்கோ” என்றார்.

    எல்லோருக்கும் காகிதம், எழுதுகலம் வழங்கப் பட்டது. அந்த ஒரு பாலகியின் தவற்றினாலேயே அன்று பல பேருக்கு திவ்ய நாமம் எழுதும் பாக்கியத்தைப் பெரியவா அருளினார். பலர் எழுதியதால் விரைவிலேயே நாலாயிரம் பூர்த்தியாயிற்று.

    பாலகியை அழைத்தார் மாமுனி. “ஒனக்கு வெள்ளிக் காசு வேண்டாம். தங்கக் காசே தரேன்” என்று மஹா பெரிய போனஸாகப் பொற் கழங்சு ஒன்றை அந்தப் பிஞ்சின் குஞ்சுக் கரத்தில் போட்டார் குணகுஞ்சரர்.

    ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!
    Source:uma 2806
Working...
X