அப்பன்டிசைட்டிஸ்(Appendicitis)

அப்பன்டிசைட்டிஸ்(Appendicitis)


அப்பன்டிக்ஸ்(Appendix) எனப்படுவது நமது பெருங்குடலோடு சேர்ந்திருக்கும் ஒரு சிறிய உறுப்பாகும்.இது நமது உடலிலே எந்தவிதமான தொழிலையும் செய்வதில்லை.இது நமக்குத் தேவை இல்லாத ஒரு உறுப்பாகும். சிலவேளைகளில் இதிலே கிருமித் தொற்று ஏற்பட்டு பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இதிலே ஏற்படும் கிருமித் தொற்றினால் அலர்ச்சி ஏற்படுவது அப்பன்டிசைட்டிஸ் (Appendicitis) எனப்படும்.

இதன் அறிகுறிகள்

1. மெலிதான காய்ச்சல்
2. வாந்தி
3. பசிக்குறைவு
4. வயிற்று வலி

இதனால் ஏற்படும் வயிற்று வலி ஆரம்பத்திலே தொப்புளைச் சுற்றி ஏற்பட்டு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வலது பக்க அடி வயிற்றை நோக்கி நகரலாம். சில பேரில் இந்த மாற்றம் சரியாக விளங்காமல் நேரடியாக வலது பக்க அடிவயிற்று வழியே ஏற்படலாம்.

இந்த நோயை வைத்தியர் நோயாளியை பரிசோதிப்பதன் மூலம் ஓரளவுக்கு உறுதிப் படுத்திக் கொள்வார். .இதை உறுதிப் படுத்துவதற்கான வேறு விசேஷமான பரிசோதனைகள் தேவை இல்லை.

குறிப்பாக வலது பக்க அடி வயிற்றிலே கையினால் அழுத்தும் போது ஏற்படும் வழியை விடஅழுத்திய கையை சடுதியாக எடுக்கும் போது வலி அதிகரிக்கும். இது Rebound tenderness எனப்படும். இவ்வாறான வலி ஏற்பட்டால் அது அப்பன்டிசைட்டிஸ் ஆக இருக்க சந்தர்ப்பம் அதிகம்.

வைத்தியர் ஏற்பட்டிருப்பது இந்த நோய்தான் என்று நினைத்தால் சத்திர சிகிச்சை செய்து அந்த உறுப்பு நீக்கப்படும்.

சில பேரிலே தொற்று ஏற்பட்டு அந்த உறுப்பைச் சுற்றி சீழ் கட்டிக் கொள்ளும்.அவ்வாறானவர்களில் சத்திரசிகிச்சை செய்வது ஆபத்தானது. அவர்களுக்கு அண்டி பயட்டிக்ஸ்(Antibiotics) கொடுக்கப்பட்டு சில
வாரங்களின் பின் சத்திர சிகிச்சை செய்யப்படும்.
Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends


Source:
Aatika Ashreen