Announcement

Collapse
No announcement yet.

3. அழகர் அந்தாதி - 034/100 வண் துளவுக்கு அல்லால் அட

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 3. அழகர் அந்தாதி - 034/100 வண் துளவுக்கு அல்லால் அட

    3. அழகர் அந்தாதி - 034/100 வண் துளவுக்கு அல்லால் அடங்காது வெங்காமப்படர் கனலே !

    பேணிக்கவித்த வரைக் குடையாய் ! பெரியோர் பதின்மர்
    ஆணிக்கவித்தமிழ் மாலை கொண்டாய் ! அழகா ! கரிய-
    மாணிக்கவித்தக மாமலையே வண் துளவுக்கு அல்லால்
    பாணிக்கவித்தடங்காது , வெங்காமப்படர் கனலே



    பதவுரை : பேணி + கவித்த
    ஆணி + கவி + தமிழ்
    மாணிக்க + வித்தக
    பாணிக்கு + அவித்து

    பேணிக் கவித்த ஆயர்களிடம் அன்பு கொண்டு , எடுத்துப் பிடித்த
    வரைக் குடையாய் கோவர்த்தன மலையைக் குடையாய் எடுத்தவனே !
    பெரியோர் பதின்மர் பெரியவர்களான பத்து ஆழ்வார்களுடைய
    ஆணிக் கவித் தமிழ் மாலை சிறந்த தமிழ்ப் பாமாலைகள் ஆகிய திவ்ய பிரபந்தங்களை
    கொண்டவனே அழகா ஏற்றுக் கொண்டவனே ! அழகர் பிரானே !
    வித்தக ஞானத்தை உடைய
    கரிய மாணிக்க மா மலையே கருமையான பெரிய மாணிக்க மலை போன்றவனே !
    வெங்காமப் படர் கனலே உன் மேல் உள்ள எனது வெவ்விய காதல் ஆகிய பரவும் நெருப்பு
    வண் துளவுக்கு அல்லால் வளப்பமுள்ள உன் துழாய் மாலைக்கு அடங்குமே தவிர
    பாணிக்கு அவித்து அடங்காது நீரினால் தணிக்கப்பட்டு அடங்காது



Working...
X