சிந்திக்க - 23.

“ ஸ்ரீவைஷ்ணவிஸம் “ என்றதும் உங்கள் நினைவிற்குவருவது, முதலில் கணினி வாரபத்திரிகையும், பேஸ்புக் குழுமமும் ( Group ) தான் இல்லையா ? ஸ்ரீவைஷ்ணவன் என்றால் அது ஒருஜாதி ( ஐய்யங்கார் ) ஸ்ரீவைஷ்ணவன் அதில் பிறந்தவர்கள் என்றே பலர் நினைக்கின்றனர். அது முற்றிலும் தவறு. அந்தத்தகுதி பிறப்பினால் வருவதல்ல.

அடியேனை நீ ஒரு ஐய்ய-ங்காரா? என்றால் ஆமாம் என்பேன். ஏனென்றால் அது பிறப்பினால் கிடைத்த தகுதி. அதே நீ ஒரு ஸ்ரீவைஷ்ணவனா ? என்று கேட்டால் பதில் கூற தயங்குவேன். காரணம் அடியேனிடம் அந்த தகுதிகள் பூரணமாக-யில்லை என்பதே. ஒரு ஸ்ரீவைஷ்ணவனின் தகுதிகளை நரஸிங் மேத்தா என்பவர் தம்முடைய, “ வைஷ்ணவஜநதோ “ என்ற பாடலில் அழகாக எடுத்துச்சொல்லியிருக்கிறார். இது மஹாத்மா காந்திக்குப் பிடித்த பாடல். அப்படியென்ன தகுதிகள் வேண்டும். இதோ

1.ஸ்ரீமந் நாராயணனே “ பரன் “ மற்ற எல்லோருமே அவனால் படைக்கப்பட்டவர்கள். முடிவில் பிறந்த அனைத்து உயிர்களும் அவனையேச் சென்று அடைய வேண்டுமென்ற ஞானம் வரப்பெற்றவர்கள்.

2. பிறந்த எல்லா உயிர்களுக்குள்ளும் அவன் அந்தர்யாமியாக இருக்கின்றான். எல்லா ஆத்மாக்களும் சமம் அவை எடுத்துக்கொண்ட உடம்பினாலேயே பேதங்கள் தோன்று கின்றன. ஆகவே எல்லா ஜீவராசிகளையும் தன்னைப்போலவே நேசிப்பவன்.

3. எந்த ஒருவர், எந்த ஒரு ஜீவராசிகளும் கஷ்டப்படுவதைப்பார்த்து பொறுக்காமல் உடனே ஓடிச்சென்று வலிய உதவுபவன்.

4. புலால், மது ஆகியவற்றை நினைத்தும் பாராமல், சாத்வீகமான உணவுகளை மட்டுமே உண்பவன்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends5. தம் ஆச்சார்யனையே தெய்வமாகப் போற்றி வணங்குபவன் என்ற இந்த அனைத்துத் தகுதிகளும் எவன் ஒருவனிடம் இருக்கின்றதோ அவர்கள் எல்லோருமே ஸ்ரீவைஷ்ணவர்கள்தாம். இப்போது உங்களுக்கேப் புரிந்தி-ருக்கும் உண்மையான ஸ்ரீவைஷ்ணவன் யார் என்று. இந்த அனைத்துத் தகுதிகளும் உங்களிடம் இருக்கின்றதா ? இல்லையென்றால் பெறநீங்களும் முயர்ச்சியுங்களேன்.

சிந்தியுங்கள்
courtesy:Poigaiadiyan