சென்னை: கடவுள் மறுப்புக் கொள்கை உடையவர்கள், தமிழகத்தில் உள்ள கோவில் மண்டபங்களில் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் திருவாரூர் மாவட்டம், கமலாபுரம் அருகிலுள்ள கண்கொடுத்தவனிதம் கிராமத்தில் உள்ள சிவாலயத்துக்கு உட்பட்ட திருமண மண்டபம் திராவிடர் கழகத்தினர் நடத்திய நிகழ்ச்சி ஒன்றுக்கு வாடகைக்கு அளிக்கப்பட்டது. இது திருவாரூரில் பெரும் சர்ச்சையை ஏற்படுதியது.

இதனையடுத்து இது தொடர்பாக முதல்வரிடம் புகார் அளிக்கப்பட்டது. அதில், தமிழகத்தின் பல இடங்களில், கோவில்களுக்குச் சொந்தமான இடங்களில், கடவுள் மறுப்பு கொள்கை உடையவர்களுக்கு நிகழ்ச்சிகள் நடத்த இடம் தரப்படுகிறது. ஆன்மிகத்துக்கு இழுக்கான இந்தச் செயலை, அறநிலையத்துறை அனுமதிப்பது தவறு. இதுபோன்ற மண்டபங்களை, பக்தர்கள் பயன்பெறும் வகையில் வாடகைக்கு விடவேண்டும்" என்று கோரப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில் செயல் அலுவலர்களுக்கும் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அறநிலையத்துறை அனுப்பியுள்ள அந்தச் சுற்றறிக்கையில், இனி வரும் காலங்களில் கோவிலுக்குச் சொந்தமான திருமண மண்டபங்கள், கோவிலைச் சுற்றியுள்ள வளாகத்தில் இந்து சமய வளர்ச்சி தொடர்பில்லாத கொள்கைகளை உடையவர்களுக்கும், நாத்திகவாதக் கொள்கை உடையவர்களுக்கும் இடம் அளிக்கக் கூடாது. மது, மாமிசம் பயன்படுத்தும் கூட்டங்களுக்கும் இது பொருந்தும்.

கோயில் மண்டபங்களை சமய வழிபாடு, தெய்வீகத் தன்மை தொடர்புடைய வளர்ச்சிக்கு பக்தர்கள் பயன்பெறும் வகையில் மட்டுமே அனுமதிக்க வேண்டும்; வாடகைக்குக் கொடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 38 ஆயிரத்துக்கும் அதிகமான கோவில்கள் உள்ளன. இவற்றில் ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமாக உள்ள கோவில்கள் 234. இந்தக் கோவில்களுக்குச் சொந்தமாக திருமண மண்டபங்கள், நிகழ்ச்சி நடத்துவதற்கான மண்டபங்கள் உள்ளன. இவை, வெளி நபர்களுக்கு பொதுவில் வாடகைக்கு விடப்பட்டு வந்தது. இந்த மண்டபங்களில் இடங்களில் வெளியார்கள் நிகழ்ச்சிகள் நடத்த இதுவரை எந்தக் கட்டுப்பாடும் இல்லை. வாடகை செலுத்திவிட்டு, எந்த நிகழ்ச்சிகளையும் நடத்திக் கொள்ளலாம் என்ற நிலை இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendshttp://news.vikatan.com/article.php?module=news&aid=19059