3. அழகர் அந்தாதி - 035/100 திங்களே ! தமியேனை எரிப்பது என் ?

படராகுவால் குவியக் குழல் ஊதிய பாலர் ; ஐயம்
அடராகுவாகனன் தாதைக்கு இட்டார் ; அலங்காரர் ; துழாய்க்கு
இடராகுவாய் வார்பலர் காண் ; தமியேனை எரிப்பது என் ; நீ
விடராகுவாய்க் கொண்டு உடல் சுட்டுக் கான்றிட்ட வெண் திங்களே ?பதவுரை : படர் + ஆ + குவால்
அடர் + ஆகு + வாகனன்
இடர் + ஆகுவார்
விட + ராகு + வாய்

விட ராகு வாய்க் கொண்டு நஞ்சை உடைய ராகுவால் வாயில் விழுங்கப்பட்டு
உடல்இடர் ஆவார் சுட்டு உடம்பைச் சுடுவதால் ,
கான்றிட்ட வெண் திங்களே உமிழ்ந்து விடப பட்ட வெண்மையான சந்திரனே !
படர் ஆ குவால் குவிய பரவிச் சென்ற பசுக்கள் கூட்டமாக திரும்பி வந்து சேரும்படி
குழல் ஊதிய பாலர் புல்லாங்குழலை ஊதிய சிறுவன் கண்ணனும் ,
ஐயம் அடர் பிச்சை ஏற்றதால் , வருந்திய
ஆகு வாகனன் தாதைக்கு பெருச்சாளி வாகனனான விநாயகரின் தந்தைக்கு
ஐயம் இட்டார் அலங்காரர் பிச்சைஇட்டவருமான , அழகர் பிரானுடைய
துழாய்க்கு இடர் ஆவார் துளசி மாலை அடைய துன்பம் அடைவார்
பலர் காண் பலர் உள்ளனர் அன்றோ ?
நீ தமியேனை எரிப்பது என் நீ என்னை மட்டும் சுடுவது ஏனோ ?
Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends