Announcement

Collapse
No announcement yet.

காலி வாட்டர் பாட்டில் கொடுத்து ரயில் கட்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • காலி வாட்டர் பாட்டில் கொடுத்து ரயில் கட்

    பீஜிங் : காலி குடி நீர் பாட்டில்களை கொடுத்து, ரயில் கட்டணம் செலுத்தும் திட்டத்தை பீஜிங் சப்வே ரயில் அறிமுகம் செய்துள்ளது. சீனாவில் ரயில் பயணம் செய்யும் பயணிகள், காலி குடிநீர் பாட்டில்களை ஆங்காங்கே வீசுகின்றனர். இதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. காலி குடி நீர் பாட்டில்களை ஒன்றாக சேகரித்து மறு சுழற்சி முறையில் பயன்படுத்த பீஜிங் சப்வே ரயில் நிர்வாகம் முடிவு செய்தது.


    Click image for larger version

Name:	Empty water bottle.jpg
Views:	1
Size:	44.5 KB
ID:	35101

    அதன்படி 2 சப்வே ரயில் நிலையங்களில், காலி பாட்டில் சேகரிக்கும் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஒரு காலி பாட்டிலை இயந்திரத்தில் போட்டால், 0.15 டாலர் அளவுக்கு ஒரு சிறு தொகை வாடிக்கையாளருக்கு கிடைக்கும். 15 பாட்டில் போட்டால், ஒரு குறிப்பிட்ட தூரத்துக்கு டிக்கெட் எடுக்கும் அளவுக்கு பணம் கிடைக்கும். திட்டம் வெற்றி பெற்றால் விரிவுபடுத்தப்படும் என சப்வே ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


    Source:http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=62001
Working...
X