Announcement

Collapse
No announcement yet.

செப்டம்பர் 11: மகாகவி பாரதியார் நினைவு தின

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • செப்டம்பர் 11: மகாகவி பாரதியார் நினைவு தின

    செப்டம்பர் 11: மகாகவி பாரதியார் நினைவு தினம் இன்று!


    Click image for larger version

Name:	Bharathi.jpg
Views:	1
Size:	14.0 KB
ID:	35102

    தமிழ் நிலத்தில் ஈரம் பாய்ச்சி வீரம் விதைத்த சொல் உழவன். மண்ணுள்ள காலம் வரை மறக்க முடியாத கவிஞன். மக்கள் மனங்களில் வாழும் ஒருவன். அழகிய தமிழ் மகன் இவன்!

    Source: Vikatan E Magazine

  • #2
    Re: செப்டம்பர் 11: மகாகவி பாரதியார் நினைவு தின



    மகாகவி பாரதியார் நினைவு தினத்தன்று அவர் பாடல்களில் எனக்கு பிடித்த பாடல் ஒன்றை நினைவுகூறுகிறேன் :


    நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த
    நிலைகெட்ட மனிதரை நினைந்து
    விட்டால்கொஞ்சமோ பிரிவினைகள் - ஒரு
    கோடியென் றாலது பெரிதாமோ?

    அஞ்சுதலைப் பாம்பென்பான் - அப்பன்
    ஆறுதலை யென்றுமகன் சொல்லிவிட்டால்
    நெஞ்சு பிரிந்து விடுவார் - பின்பு
    நெடுநாளிருவரும் பகைத்திருப்பார் (நெஞ்சு)

    சாத்திரங்க ளொன்றும் காணார் - பொய்ச்
    சாத்திரப் பேய்கள்சொலும் வார்த்தைநம்பியே
    கோத்திரமொன் யிருந்தாலும் - ஒரு
    கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழ்வார்
    தோத்திரங்கள் சொல்லியவர்தாம் - தமைச்
    சூதுசெயு நீசர்களைப் பணிந்திடுவார் - ஆனால்
    ஆத்திரங் கொண்டே யிவன் சைவன் - இவன்
    அரிபக்த னென்றுபெருஞ் சண்டையிடுவார் (நெஞ்சு)

    எண்ணிலா நோயுடையார் - இவர்
    எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார்
    கண்ணிலாக் குழந்தைகள்போல் - பிறர்
    காட்டிய வழியிற் சென்று மாட்டிக் கொள்வார்
    நண்ணிய பெருங்கலைகள் - பத்து
    நாலாயிரங் கோடி நயந்து நின்ற
    புண்ணிய நாட்டினிலே - இவர்
    பொறியற்ற விலங்குகள் போல வாழ்வார் (நெஞ்சு)

    ப்ரஹ்மண்யன்
    பெங்களூரு

    Comment

    Working...
    X