Announcement

Collapse
No announcement yet.

"குரங்குகள் போன்ற மிருகங்களுக்கு கூட ஒர&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • "குரங்குகள் போன்ற மிருகங்களுக்கு கூட ஒர&#

    "குரங்குகள் போன்ற மிருகங்களுக்கு கூட ஒரு discipline இருக்கு! லீடர் குரங்கு சொல்கிறபடி நடக்கின்றன"

    Click image for larger version

Name:	Periyava.jpg
Views:	1
Size:	72.8 KB
ID:	35103


    பெரியவாள் பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்துகொண்டிருந்தார்கள்.

    எதிரே, ஒரு பெரிய மரம். தடினமான குரங்கு ஒன்று வந்து மரத்தில் ஏறியது. பின், இருபது - முப்பது குரங்குகள் அந்த லீடர் குரங்கை தொடர்ந்து மரத்தில் ஏறின.

    பெரியவாள், ஒரு கூடை மாம்பழத்தை மரத்தடியில் போட சொன்னார்கள்.

    லீடர் குரங்கு என்ன உத்தரவு எப்படி போட்டதோ தெரியவில்லை! ஆனால், மற்ற குரங்குகள் ஒவ்வொன்றாக வந்து பழத்தை எடுத்துகொண்டு மேலே சென்றன. லீடர் குரங்கு மட்டும் ஒரு பழத்தை கூட தொடவில்லை!

    பெரியவாள் சொன்னார்கள்:

    "குரங்குகள் போன்ற மிருகங்களுக்கு கூட ஒரு discipline இருக்கு! லீடர் குரங்கு சொல்கிறபடி நடக்கின்றன.

    "காட்டில், யானைகளுக்கு ஒரு தலைமை யானை இருக்கும். அந்த லீடர் யானையை follow பண்ணித்தான் மற்ற யானைகள் செல்லும்.

    "ஒரு கட்டெறும்பு செத்துபோனால், மற்ற கட்டெறும்புகள் அதை இழுத்துச் செல்லும்.

    "ஒரு காக்கை இறந்து போனால், மற்ற காக்கைகள் மரத்தில் உட்கார்ந்துகொண்டு துக்கமாய் கதறும்.

    "ஆனால், ஆறறிவு படைத்த மனிதர்கள் தான் குரு சொல்கிறபடி நடப்பதில்லை. என்னை பார்த்து, நீங்களெல்லாம் ஆசார்யாள். பெரியவாள் என்றெல்லாம் சொல்கிறீர்கள். ஆனால், நான் சொல்வதை உங்களால் செய்ய முடிகிறதில்லை!"

    கவனமாக கேட்டுகொண்டிருந்த பக்தர்கள், ஒரே குரலாக, "பெரியவா என்ன உத்தரவு போட்டாலும் செய்கிறோம்" என்று பக்தியோடு பதிலளித்தார்கள்.

    "சரி, காலையில் இரண்டு நிமிஷம், சாயங்காலம் இரண்டு நிமிஷம், எனக்காக ஒதுக்குங்கள். இருபத்திநான்கு மணி நேரத்தில், நாலு நிமிஷம் தான் கேட்கிறேன்.

    "காலையில், இரண்டு நிமிஷம் "ராம, ராம" என்று சொலுங்கோ; சாயங்காலம் இரண்டு நிமிஷம் "சிவ, சிவ" ன்னு சொலுங்கோ..."

    "அப்படியே செய்கிறோம்" என்று சுமார் நூறு பேர்கள் தெரிவித்து கொண்டார்கள்.

    அமளி அடங்கியதும், பெரியவாள் அருகிலிருந்த தொண்டர்களிடம், "பத்து பன்னிரண்டு பேர்களாவது , சொன்ன சொல்லை காப்பாத்துவா" என்றார்கள்.

    அந்த, யாரோ பத்து பன்னிரண்டு புண்ணியாத்மாக்களை உருவாக்குவதற்காகத்தான்., ஆழமான கருத்துடன், அரைமணி lecture!

    குரங்கு, காட்டு யானை, கட்டெறும்பு, காக்கை - நமக்கு நல்ல வழிகாட்டிகள்; "ஆச்சார்யர்கள்".

    அவர்களை (அவைகளை) யாவது follow பண்ணலாம் தானே?


    Source:Varagooran Narayanan
Working...
X