Announcement

Collapse
No announcement yet.

திருப்பதிக்கு பக்தர்கள் வரவேண்டாம்: மீண&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்பதிக்கு பக்தர்கள் வரவேண்டாம்: மீண&

    திருப்பதி: திருமலையில், மீண்டும், 48 மணி நேர முழு அடைப்பு போராட்டத்தை, தெலுங்கானா எதிர்ப்புக் குழுவினர் அறிவித்து உள்ளனர். இதனால், "திருப்பதிக்கு வரவேண்டாம்' என, பக்தர்கள் எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.

    ஆந்திராவில், தனித் தெலுங்கானா எதிர்ப்பு போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இதன் அடுத்த கட்டமாக, "வரும், 13ம் தேதி நள்ளிரவு, 12:00 மணி முதல், 15ம் தேதி நள்ளிரவு, 12:00 மணி வரை, திருப்பதியில் இருந்து, திருமலைக்கு எந்த வாகனமும் அனுமதிக்கப்படாது' என, போராட்டம் நடத்தும் கூட்டமைப்புக் குழுவினர் அறிவித்து உள்ளனர். இதனால், திருமலைக்கு இரு சக்கர வாகனங்கள், கார்கள், பஸ்கள், லாரிகள் உள்ளிட்ட எந்த வாகனமும் செல்ல இயலாது.

    இதுகுறித்து, போராட்டக் குழுவினர் கூறியதாவது: மத்திய அரசு எங்கள் உணர்வை புரிந்து கொள்ள மறுக்கிறது. தனித் தெலுங்கானா மசோதாவை நிறைவேற்றுவதில், மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இதுநாள் வரை, தேவஸ்தானத்தின் வேண்டுகோளின்படி, திருமலைக்கு வரும் பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். இனி, அவர்கள் வருவது தடை செய்யப்படும். எனவே, பக்தர்கள், எங்கள் மன உணர்வை அறிந்து, முழு அடைப்பு போராட்டத்துக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்; போராட்ட நாட்களில், பக்தர்கள் யாரும் திருமலைக்கு வரவேண்டாம். தேவஸ்தானம் மீண்டும் வற்புறுத்தினாலும், எங்களுடைய முடிவு இறுதியானது. எந்த வாகனத்தையும் இயங்க விட மாட்டோம். மேலும், வரும், 13ம் தேதி இரவு, திருப்பதி நகரம் முழுவதும், மின் வினியோகம் நிறுத்தப்பட்டு, "மெழுகுவர்த்தி ஊர்வலம்' நடத்தப்படும். இவ்வாறு, போராட்டக் குழுவினர் கூறியுள்ளனர்.

    இதே போன்று, சில நாட்களுக்கு முன், திருப்பதியை ஒட்டிய பகுதிகளில், முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது, திருமலைக்கு சென்ற பக்தர்களின் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன. தற்போது நடக்க உள்ள போராட்டத்தின் போது, பக்தர்களின் வாகனங்களுக்கும் அனுமதி இல்லை, என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

    http://www.dinamalar.com/news_detail.asp?id=800597
Working...
X