Announcement

Collapse
No announcement yet.

3. அழகர் அந்தாதி - 041/100 என் பிணி தணிக்க , அலங்காரī

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 3. அழகர் அந்தாதி - 041/100 என் பிணி தணிக்க , அலங்காரī

    3. அழகர் அந்தாதி - 041/100 என் பிணி தணிக்க , அலங்காரர் அலங்கல் நல்கீர் !

    பிழைத்தலை யான் எண்ணிப் பேசுகின்றேன் ; இப்பிணி மற்றொன்றால் ,
    மழைத்தலை வார்குழலீர் ! தணியாது வருணனை முன்
    அழைத்தலை அங்கு அடைத்தார் அலங்காரர் அலங்கல் நல்கீர் !
    முழைத்தலை நின்று மலயாநிலம் வந்து மோதும் முன்னே



    பதவுரை : பிழைத்தலை
    மழை + தலை (கூந்தல்)
    அழைத்து + அலை
    முழை + தலை (வாசல்)

    மழைத் தலை வார் குழலீர் மேகம் போல் கரிய கூந்தலை உடையவர்களே !
    யான் பிழைத்தலை நான்என் காதல் நோயிலிருந்து பிழைக்கும் வழியை
    எண்ணிப் பேசுகிறேன் ஆராய்ந்து கூறுகிறேன்
    இப்பிணி மற்றொன்றால் எனது இந்த காதல் நோய் வேறு பரிஹாரத்தால்
    தணியாது அடங்காது
    மலயாநிலம் மலய மாருதம் ஆகிய தென்றல் காற்று
    முழைத் தலை நின்று அந்த மலையின் குகையிலிருந்து
    வந்து மோதும் முன்னே வந்து என்னைத் தாக்கி வருத்துவதற்கு முன்னே ,
    வருணனை முன் அழைத்து ராமாவதாரத்தில் வருணனை எதிரில் வரவழைத்து
    அலை அங்கு அடைத்தார் கடலுக்கு அப்போது அணை கட்டி அடைத்தவரான
    அலங்காரர் அலங்கல் அழகரது மாலையை
    நல்கீர் என் நோய் தணிய , என்னிடம் கொணர்ந்து கொடுங்கள்
    Last edited by sridharv1946; 12-09-13, 12:00.
Working...
X