Announcement

Collapse
No announcement yet.

3. அழகர் அந்தாதி - 042/100 மறந்தும் வந்தனை செய்யேன

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 3. அழகர் அந்தாதி - 042/100 மறந்தும் வந்தனை செய்யேன

    3. அழகர் அந்தாதி -042/100 மறந்தும் வந்தனை செய்யேன் புறம் சில தேவரையே !

    மோதாகவந்தனை மூட்டு இலங்கேசன் முடிந்து விண்ணின்

    மீதாகவந்தனை வில் எடுத்தே விடை வெற்பில் நின்ற

    நாதாகவந்தனைச் செற்றாய் ! உனை அன்றி நான் மறந்தும்

    தீதாகவந்தனை செய்யேன் புறம் சில தேவரையே





    பதவுரை :
    மோது + ஆகவம் + தனை

    மீது + ஆக + வந்தனை (வந்தாய்)

    நாதா + கவந்தனை

    தீது + ஆக + வந்தனை (வணக்கம்)


    விடை வெற்பில் நின்ற நாதா ..ரிஷப கிரியில் நிற்கும் தலைவனே !

    கவந்தனைச் செற்றாய் ..........கபந்தனைக் கொன்றவனே !

    மோது ஆகவம் தனை மூட்டு ..தாக்கும் போரை வலிய உண்டாக்கி நடத்திய

    இலங்கேசன் முடிந்து ............இலங்கை மன்னன் ராவணன் இறந்து

    விண்ணின் மீது ஆக ..............மேல் உலகம் சேரும்படி ,

    வில் எடுத்து வந்தனை ...........கோதண்டம் எனும் வில்லை கையில் எடுத்து
    வந்தாய் .

    உனை அன்றி .......................இப்படிப்பட்ட உன்னை விட்டு

    மறந்தும் தீது ஆக .................மறந்தாயினும் தீமை வரும்படி ,

    புறம் சில தேவரை ................வேறு சில தேவர்களை

    நான் வந்தனை செய்யேன்
    ....நான் வணங்க மாட்டேன்




    Last edited by sridharv1946; 02-03-18, 15:46.
Working...
X