Announcement

Collapse
No announcement yet.

3. அழகர் அந்தாதி - 043/100 மா வரையானை ஒருவனையே சொல்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 3. அழகர் அந்தாதி - 043/100 மா வரையானை ஒருவனையே சொல்

    3. அழகர் அந்தாதி - 043/100 மா வரையானை ஒருவனையே சொல்லி வாழுமினே !

    தேவரையாதல் மனிதரை யாதல் செழும் கவிதை

    நாவரையாமல் நவிலுகிற்பீர் நம்மை ஆளும் செம்பொன்

    மேவரையானை இருஞ்சோலை வேங்கடமெய்யம் என்னும்

    மாவரையானை ஒருவனையே சொல்லி வாழுமினே





    பதவுரை :

    தேவரை + யாதல்

    நா + வரையாமல்

    மேவு + அரையானை

    மா + வரையானை

    .

    தேவரை யாதல் ..........................தேவர்களைக் குறித்தாவது ,

    மனிதரை யாதல் ..................................மனிதர்களைக் குறித்தாவது

    நா வரையாமல் ............................நாவினால் வரையறை இன்றி

    செழும் கவிதை ....................................செழுமையான பாடல்களைப்

    நவிலுகிற்பீர் .................................பாடித் துதிப்பவர்களே !

    நம்மை ஆளும் ..............................நம் அனைவரையும் அடிமையாகக் கொண்டுள்ள

    செம்பொன் மேவு அரையானை ......சிவந்த பொன்னாடை உடுத்திய இடை உடையவனும்

    இருஞ்சோலை , வேங்கடம் ............திருமாலிருஞ்சோலை , திருவேங்கடமலை

    மெய்யம் எனும் மா வரையானை ......திருமெய்யம் எனும் பெரிய மலைகளில் இருக்கும்

    ஒருவனையே சொல்லி வாழுமினே ...ஒருவனையே பாடித் துதித்து வாழுங்கள்


    Last edited by sridharv1946; 02-03-18, 15:58.
Working...
X