நீதி சாஸ்திரம் கூறும் தாயின் மகிமை!Click image for larger version. 

Name:	Thai.jpg 
Views:	7 
Size:	67.8 KB 
ID:	1191

நமக்கு உடல் கொடுத்த அன்னை தியாகத்துடன் கூடிய அன்பான சேவை செய்வதில் தாயே முதலிடம் வகிக்கிறாள். தாயை வணங்கி ஆசி பெறும் ஒவ்வொரு முறையும் நம் பூர்வ ஜென்ம கர்மவினை குறைகிறது. கலியுக அவதாரமான பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா தாய்க்கு நாம் ஆற்ற வேண்டிய கடமைகளை குறிப்பிடுகிறார். ஒவ்வொருவரும் தம் தம் தாயினை கவுரவிக்க வேண்டும். தாய் தகப்பனை வணங்கினால் உங்களுக்கு அனைத்து செல்வத்தையும் தரும். ஆதிசங்கரர், பட்டினத்தார். இராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், ஸ்ரீ ரமண ரிஷிகள் இவர்கள் எல்லோரும் முற்றும் துறந்த முனிவர்களாக இருந்தாலும் தாய்க்கு செய்ய வேண்டிய கடமைகளை கடைசி வரை செய்தார்கள்.

ஒரு செயலைச் சொல்கிறது நீதி சாஸ்திரம்

1. ஆறுதடவை பூமியை வலம் வருவதும்
2. பதினாயிரம் தடவை காசி யாத்திரை செய்து கங்கையில் நீராடுவதும்
3. பல நூறு தடவை இரமேஸ்வரத்தில் சேது ஸ்நானம் செய்வதால் கிடைக்கும் பலன். பெற்ற தாயை மனப்பூர்வமாக ஒரு தடவை வணங்குவதில் செய்வதிலேயே கிடைத்துவிடும் என்கிறது நீதி சாஸ்திரம்.

தாய்மை(பழமொழிகள்)
1. மனித அன்பின் பிறப்பிடம் தாய்.
2. தாயின் வாழ்த்து வெண்தனலில் வேகாது, வெள்ளத்தால் அழியாதது.
3. தாயின் இருதயம் என்றும் வாடாத மலர்.
4. தாயையும், தந்தையும் தவிர ஒருவர் எதையும் வாங்கலாம்.
5. குழந்தை தாய்க்கு நங்கூரம். அவர் இருந்த இடத்தை விட்டு அசைக்கவே முடியாது.
6. மாதா மனம் எரிய, வாழாய் ஒரு நாளும்.
7. அன்னையின் அன்புக்கு வயது கிடையாது.
8. தாயை அழவிடுபவர்கள் கவனமாய் இருக்க வேண்டும். ஆண்டவன் அவள் கண்ணீரை எண்ணிக்கொண்டிருக்கிறான்.
Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite FriendsSource: Nagarathar