Announcement

Collapse
No announcement yet.

3. அழகர் அந்தாதி - 046/100 பனிச்சோலை வெற்பில் நிற்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 3. அழகர் அந்தாதி - 046/100 பனிச்சோலை வெற்பில் நிற்

    3. அழகர் அந்தாதி - 046/100 பனிச்சோலை வெற்பில் நிற்பாரைச் சரண் புகுமே !

    நகரமுந்நாடும் புரந்தவர் நண்ணலரால் வனமும்

    சிகரமுந்நாடும் சிறுமை கண்டோம் ; மஞ்ஞை தேன் இசைகள்

    பகரமுந்நாடும் பனிச்சோலை வெற்பில் நிற்பார்க்கு ; கஞ்சன்

    தகரமுந்நாடுகைத்தார்க்கு அறிந்தீர்கள் ! சரண் புகுமே




    பதவுரை :

    நகரமும் + நாடும்
    (தேசமும்)

    சிகரமும் + நாடும்
    (செல்லும்)

    பகர + முன் + ஆடும்

    தகர + முன் + நாள்
    .


    நகரமும் நாடும் புரந்தவர் ................நகரங்களையும் , நாடுகளையும் ஆண்ட அரசர்கள்

    நண்ணலரால் .................................பகைவைர்களால் விரட்டப்பட்டு

    வனமும் சிகரமும் நாடும் ...................காட்டையும் , மலை உச்சியையும் தேடிச் செல்லும்படியான

    சிறுமை கண்டோம் ..........................எளிமையைப் பார்த்துள்ளோம்

    அறிந்தீர்கள் .....................................இவ்வாறு எல்லாவற்றையும் அறிந்தவர்களே !

    தேன் இசை பகர ...............................வண்டுகள் கீதங்கள் பாட

    மஞ்ஞை முன் ஆடும் ...........................மயில்கள் எதிரில் கூத்தாட ,

    பனிச் சோலை வெற்பில் நிற்பார்க்கு ...குளிர்ந்த சோலை மலையில் நிற்பவரும்,

    முன் நாள் கஞ்சன் தகர .....................கிருஷ்ணாவதார காலத்தில் , கம்சன் அழியும்படி

    துகைத்தார்க்கு .................................அவனை மிதித்தவருமான

    சரண் புகுமே .....................................அழகர் பிரானை அடைக்கலம் புகுங்கள்



    Last edited by sridharv1946; 02-03-18, 16:12.
Working...
X