Announcement

Collapse
No announcement yet.

3. அழகர் அந்தாதி - 048/100 அலங்காரர் அடிமை ஆனால் , இī

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 3. அழகர் அந்தாதி - 048/100 அலங்காரர் அடிமை ஆனால் , இī

    3. அழகர் அந்தாதி - 048/100 அலங்காரர் அடிமை ஆனால் , இரு வினையும் வராது !

    முதுவிருந்தாவனத்து ஆ நிரை மேய்த்தவர் ; முன் , விதுரன்
    புதுவிருந்தானவர் மால் அலங்காரர் -பொலாங்கழல் ஆம்
    மதுவிருந்தாமரைக்கு ஆளாய் இரார்க்கு , மதிநுட்ப நூல்
    எதுவிருந்தாலும் அதனால் விடா; இங்கு இருவினையே



    பதவுரை :
    முது + விருந்தாவனத்து
    புது + விருந்து + ஆனவர்
    மது + இரும் + தாமரைக்கு
    எது + இருந்தாலும்

    முதுவிருந்தாவனத்து பழமையான பிருந்தாவனத்தில் கிருஷ்ணனாக இருந்தபோது
    ஆ நிரை மேய்த்தவர் பசுக் கூட்டங்களை மேய்த்தவரும் ,
    முன் விதுரன் முன்பு விதுரனுக்கு
    புது விருந்து ஆனவர் அதிசயமான விருந்தினர் ஆனவருமான ,
    மால் அலங்காரர் பெருமையுடைய அழகர் பிரானுடைய
    பொலாம் கழல் ஆம் அழகிய திருவடிகள் ஆகிய
    மது இரும் தாமரைக்கு தேன் உடைய தாமரை மலர்களுக்கு
    ஆளாய் இரார்க்கு அடிமையாய் இராதவர்களுக்கு ,
    மதி நுட்ப நூல் அறிவைக் கொடுக்கும் சாஸ்திரங்களில்
    எது இருந்தாலும் அதனால் எதைப் படித்திருந்தாலும் , அந்த அறிவினால்
    இங்கு இருவினை விடா இவ்வுலகில் இரு வினைகளும் நீங்காது



    Last edited by sridharv1946; 13-09-13, 21:05.
Working...
X