Announcement

Collapse
No announcement yet.

3. அழகர் அந்தாதி - 051/100 மால் அழகர் திருப்பாதம் எ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 3. அழகர் அந்தாதி - 051/100 மால் அழகர் திருப்பாதம் எ

    3. அழகர் அந்தாதி - 051/100 மால் அழகர் திருப்பாதம் எண்ணுவீர் !

    மணவாளராவி நிகர் திரு மாதுக்கு ; மால் அழகர்
    ணவாளராவில் கண் பள்ளி கொள்வார் ; திருப்பாதம் எண்ணக்
    குணவாளராவிர் ; இன்றே உயிர்காள் - உம்மைக் கூற்றுவனார்
    நிணவாளராவி அறுக்கும் அப்போது நினைப்பு அரிதே




    பதவுரை :
    மணவாளர் + ஆவி
    பணவாள் + அராவில்
    குணவாளர் + ஆவிர்
    நினைவாள் + அராவி


    உயிர்காள் உயிர்களே !
    ஆவி நிகர் திரு மாதுக்கு தனது உயிர் போன்ற திருமகளுக்குக் கணவரும் ,
    மால் அழகர் பெருமை உடைய அழகரும் ,
    பண வாள் அராவில் படத்தையும் ஒளியையும் உடைய ஆதிசேஷன் மேல்
    கண் பள்ளி கொள்வார் யோக நித்திரை செய்பவருமான எம்பெருமானின்
    திருப்பாதம் எண்ண திருவடிகளைத் தியானித்து ,
    குணவாளர் ஆவிர் இன்றே இப்போதே நற்குணம் உடையவர் ஆவீர்கள் .
    உம்மைக் கூற்றுவனார் உங்களை எமன்
    நிணவாள் அராவி நிணம் தோய்ந்த வாளாயுதத்தைக் கூர் செய்து கொண்டு
    அறுக்கும் அப்போது அறுக்கும்படியான அந்திம காலத்தில்
    நினைப்பு அரிதே அப்பெருமான் திருவடிகளை நினைப்பது மிகக் கடினம் ஆகும்

    Last edited by sridharv1946; 14-09-13, 20:41.
Working...
X