Announcement

Collapse
No announcement yet.

மகாத்மா காந்தியின் வாரிசுகள்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • மகாத்மா காந்தியின் வாரிசுகள்

    மகாத்மா காந்தியின் வாரிசுகள் இப்போது என்ன செய்கிறார்கள்?


    Click image for larger version

Name:	Varisugal.jpg
Views:	1
Size:	28.4 KB
ID:	35129

    மகாத்மா காந்திக்கு ஹரிலால், மணிலால், ராம்தாஸ், தேவதாஸ் என்று நான்கு மகன்கள்.

    காந்தியின் சேவா எண்ணங்கள் கொண்டவராக மணிலால் வளர்ந்தார்.
    அரசியல் ஈடுபாடு கொண்டவராக ராம்தாஸ் திகழ்ந்தார். தர்க்கமும் தெளிந்த சிந்தனையும் படைத்தவராக தேவதாஸ் இருந்தார்.

    இவர்கள் மூவருமே காந்தியின் நேரடிப் பார்வையில் வளர்க்கப்பட்டவர்கள்.

    மூத்தவரான ஹரிலால், தென்னாப்பிரிக்காவில் காந்தி இருந்தபோது இந்தியாவில் வளர்ந்தவர். இதனால், ஹரிலாலின் நடவடிக்கைகள் அனைத்துமே காந்தியத்துக்கு எதிர்ப்பதமாகவே இருந்தன. காந்தியின் மரணத்தின்போது எங்கே இருக்கிறார் என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு, ஹரிலாலின் வாழ்க்கை மிக மோசமானது.

    இவர்கள் யாரையும் நேரடி அரசியலுக்குக் கொண்டுவரவோ பதவிகளில் உட்காரவைக்கவோ, காந்தி விரும்பவில்லை. ஒருவேளை காந்தி நினைத்திருந்தால், அரசியலுக்குள் ராம்தாஸ் அழைத்துவரப்பட்டு இருக்கலாம். மிக உயர்ந்த பதவியில் உட்காரவைக்கப்பட்டு இருக்கலாம்.

    இளைய மகனான தேவதாஸின் பிள்ளைகள்தான் இன்று காந்தியின் மரியாதையை அதிகப்படுத்தும் அறிஞர்களாகப் பெயர் பெற்றுவருகிறார்கள்.

    ராஜ்மோகன் காந்தி, கோபாலகிருஷ்ணன் காந்தி, ராமச்சந்திர காந்தி ஆகிய பேரன்களும், மகன்களால் கிடைக்காத மரியாதையுடன் வலம் வருகிறார்கள்.



    Source: ஜூனியர் விகடன்
Working...
X