Announcement

Collapse
No announcement yet.

sukruth mahalya tharpanam

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • sukruth mahalya tharpanam

    Respected members

    Can somebody guide how to perform sukruth mahalya tharapanam? How is it different from the usual one. This is mentioned in 'Sri Vaishnava Dina Kurippu" by Sowmianarayanan Swami. But no details are available further. This is avaialble as free download @ www.sadagopan.org

    thanks
    vimal

  • #2
    Re: sukruth mahalya tharpanam

    ஶ்ரீ:



    மஹாளயம்.
    பக்ஷம் என்றால் 15 நாட்கள். கன்யா ராசியில் சூரியன் நுழையும் போது நடை பெறுகின்ற கிருஷ்ண பக்ஷம் மஹாளய பக்ஷம் எனப்படும். இவற்றின் சிறப்பு மிக அதிகம்.

    சுருக்கமாக என்னவென்றால் பித்ரு லோகத்தில் உள்ள பூர்வ புருஷர்கள் யமனின் அனுமதி பெற்று பூமிக்கு வந்து தாமே விரும்பித் தம் சந்ததியினர் கொடுப்பதை முழு திருப்தியுடன் ஏற்பர்.

    இந்த பக்ஷத்தில் தகப்பனார் இல்லாதவர்கள் தினமும் தர்பணம் செய்யலாம். இதர்கான விவரங்கள் ஆத்து வாத்யாரிடம் கேட்டு தெரிந்துக் கொள்ளவும். இந்த பக்ஷத்தில் மட்டும்தான் காருண்ய பித்ருக்களுக்கு தர்ப்பணம் சொல்லியிருக்கிறது.

    குறைந்தது ஏதாவது ஒரு நாளிலாவது மஹாளய ச்ராத்தம் செய்துதான் ஆக வேண்டும்.

    அதை ஹிரண்ய ரூபமாகவும் செய்யலாம். தவறில்லை. மேலும் முடிந்தால் அன்று சமாராதனை ரூபமாக ப்ராஹ்மனாளுக்கு போஜனம் முடிந்தால் அன்று சமாராதனை ரூபமாக ப்ராஹ்மனாளுக்கு போஜனம் செய்விப்பதும் விசேஷம்.

    மஹாளயத்தில் பரணிக்கு ‘மஹாபரணீ “ என்று பெயர். த்ரயோதசிக்கு, ‘கஜச்சாயை” என்று பெயர். மத்யாஷ்டமிக்கு ‘கயை” எனப்பெயர். இவைகளிற் செய்யும் ச்ராத்தம், கயா ச்ராத்தத்திற்கு ஸமானம். அமாவஸ்யை, வ்யதீபாதம், பரணீ, த்வாதசீ, அஷ்டமி இவைகளில் திதி, நக்ஷத்ரம், வாரம் இவைகளால் ஏற்பட்ட தோஷங்களைக் கவனிக்கவேண்டியதில்லை. மஹாளயபக்ஷத்தைத் தவிர, மற்ற பக்ஷங்களில் ப்;;;;ரதமை, ஷஷ்டி, ஏகாதசி, த்ரயோதசி, ஜன்மநக்ஷத்ரம், ரோஹிணீ, ரேவதீ, மகம் இவைகளில் மஹாளயம் கூடாது. ஏகவர்க்கத்திற்கு மஹாளயம் செய்யும் விஷயத்தில், த்ரயோதசீ, மகம் இவைகள் கூடாது. இரண்டு வர்க்கத்திற்கும் செய்கிற மஹாளயத்தில் த்ரயோதசீ, மகம் மெத்த ச்லாக்யம், பிள்ளைகள் பிரித்துக்கொண்டாலும், ஒன்றாக இருந்தாலும், ப்ரத்யேகமாய்த்தான் மஹாளயம் செய்யவேண்டியது.

    காருணிக பித்ருக்களாவன:-- சிறிய தகப்பன், பெரிய தகப்பன், தமையன், தம்பி, பிள்ளைகள், அத்தை, அம்மான், பெரியதாயார், சிறியதாயார், ஸஹோதரிகள், தங்கை தமக்கைகளின் புத்ரர்கள், பார்யை, மாமனார், அத்திம்பேர், மாம்டுப்பெண், மைத்துனன், குரு, யஜமானன், ஸ்நேகிதன் இவர்களுக்கும் மஹாளயத்தில் ச்ர்hத்தம் செய்யவேண்டும். பிள்ளையுள்ள சிறிய தகப்பனுக்கு வேண்டியதவச்யமில்லை. மஹாளயச்ராத்தத்தை அன்னரூபமாய் செய்கிறவர்களும், ஹிரண்யரூபமாய் செய்கிறவர்களும், ப்ரதிவர்ஷமும் அவ்விதமே செய்யவேண்டுமென்ற நியமமில்லை. தேச காலசக்த்யனுஸாரமாய் மாரிச்செய்வதால் ;தோஷமில்லை. விதுரர்கள் மஹாளத்தை அன்னரூபமாய்ச் செய்ய அதிகாரமுள்ளவர்களல்ல. பர்வதினத்தில், ப்ரத்யாப்திகச்ராத்தம் க்ரஹணத்தால் நிஷேதிக்கப்பட்டு மறுநாள் செய்யவேண்டிவரும் விஷயத்தில் பர்வதினத்தில் ப்ரத்யாப்திக ச்ராத்தத்தை ;ஹிரண்ய ரூபமாய்ச் செய்யவேண்டியது. அதற்கங்கமாய் தர்ப்பணம் கிடையாது. மாதா ஜீவித்திருந்தால்; மஹாளயத்தில் மாத்ரு வர்க்கத்துக்கு வரணமில்லை. ஸபத்நீமாதா ஜீவித்திருந்தாலும் பிதாமஹ்யாதிகளுக்கு வரணமில்லை. ஆனால் மாதாவோ அல்லது ஸபத்நீமாதாவோ இறந்துபோயிருந்தால் அவர்களுக்கு மட்டில் வஸ{ரூபமாக வரணம் செய்யவேண்டுமென்று தோன்றுகிறது. இரண்டு பேரும் இறந்துபோயிருக்கும் பக்ஷத்தில் க்ரமப்படி மாத்ருவர்க்கத்திற்கும் ஸபத்நீமாதாவுக்குத் தனியாகவும் வரணம் உண்டு. சிலர் ஸபத்நீமாதாவை காருணிக பித்ருக்களில் சேர்த்து வரணம் செய்கிறார்கள். அது பிசகு. அவள் மாதாவைப்போலவே தவிர, காருணிக பித்ருக்களில் சேரமாட்டாள். ஸன்யாஸியின் மஹாளயத்தை த்வர்தசியிலேயே செய்யவேண்டியது. மற்ற திதிகளில் செய்யக்கூடாது. ஆனால் த்வாதசியில் ;ஸந்யாஸியல்லாத மற்றவர்களுக்கும் செய்யலாம்.

    மஹாளய பட்ச தர்ப்பண பலன்கள்!

    பிரதமை : செல்வம் பெருகும் (தனலாபம்)

    துவிதியை : வாரிசு வளர்ச்சி (வம்ச விருத்தி)

    திருதியை : திருப்திகரமான இல்வாழ்க்கை (வரன்) அமையும்

    சதுர்த்தி : பகை விலகும் (எதிரிகள் தொல்லை நீங்கும்)

    பஞ்சமி : விரும்பிய பொருள் சேரும் (ஸம்பத்து விருத்தி)

    சஷ்டி : தெய்வீகத் தன்மை ஓங்கும் (மற்றவர் மதிப்பர்)

    சப்தமி : மேலுலகோர் ஆசி

    அஷ்டமி : நல்லறிவு வளரும்

    நவமி : ஏழுபிறவிக்கும் நல்ல வாழ்க்கைத் துணை

    தசமி : தடைகள் நீங்கி விருப்பங்கள் நிறைவேறும்

    ஏகாதசி : வேதவித்யை, கல்வி, கலைகளில் சிறக்கலாம்

    துவாதசி : தங்கம், வைர ஆபரணங்கள் சேரும்

    திரியோதசி : நல்ல குழந்தைகள், கால்நடைச் செல்வம், நீண்ட ஆயுள் கிட்டும்

    சதுர்த்தசி : முழுமையான இல்லறம் (கணவன் - மனைவி ஒற்றுமை)

    அமாவாசை : மூதாதையர், ரிஷிகள், தேவர்களின் ஆசி கிட்டும்

    SrI:

    Dear AstikAs :

    Sriman NVS Swamy’s comments will be very useful to you all as MahALa Paksham approaches . Please contact him if you need more information on this Pirtu ViSEsha Kaimkaryam . He is the founder of SrivaishNava Kendram and Tamil Brahmin Forum .
    You can enroll in the latter and help spread the messages relating to the observance of Vaidhika karmas .

    Have a sacred MahaLaya Pksham season ,
    V.Sadagopan

    From: NVS
    Sent: Friday, September 13, 2013 2:44 AM
    To: Parthasarathy R ; Dr.V.Sadagopan
    Subject: Re: Mahalaya Paksham

    Sri:
    There is no option to include or exclude anybody in the Sankalpam of mahAlaya tarpaNam for Sri Vaishnavites.
    Because the mantram is "pitruvya mAduladhi vargatvaya kAruNya pitruun" so no one is stated explicitly in this sankalpam.

    1. Also, no need of worrying about son less parents, because it means all are attained moksham and there is no one remains to take birth in that family.

    2. Doing shradham is not feeding of starving pitrus anything, it is just like offering to God and it is only a mandatory duty of a living human.
    God will accept your offering if lot of loyalty and sincerity shown in your bhakthi, likely many fold of your loyalty and sincerity is required to offer a thing
    for pitrus, because, the God is always God and pitru is always pitru who requires many steps to get God's Mercy.
    If the above two points were clearly understood, there will be no room for questioning about pitrus gati.
    regs,
    nvs

    2013/9/11 Parthasarathy R paartha56@gmail.com>

    Respected Swamin,

    I am sorry I did not put my question right. Adiyen’s question was not why should we do mahalaya. It is for whom all we can do. Since even a friend is included, are we permitted to perform mahalaya tharpanam for other relatives who are not stated specifically in the list sent by you.

    My co-brother (sorry I wrongly put it as brother in law) has only an unmarried daughter and no son. Can I include him as my Karunya pithru and perform tharpanam. Kindly advise.

    My apologies once again for not framing the question correctly.

    Dasan Parthasarathy

    From: NVS

    Sent: Saturday, September 07, 2013 9:12 AM

    To: VS

    Cc: R. Parthasarathy

    Subject: Re: Mahalaya Paksham



    Dear Sriman VS Swamin,

    Dasan,

    As for as I know or to my knowledge, 'husband of wife's sister' will be called as "Co - Brother"

    in Non Brahmin Tamil it is - சகலை and in Brahmin Tamil it is "ஷட்டகர்".

    அடியேன்,

    இந்த ஸ்வாமியின் கேள்வியிலிருந்து அடியேன் புரிந்துகொண்டதாவது:

    மஹாலய ச்ராத்தம் செய்வதால் யார் யாருக்கு ப்ரயோஜனம் என்று அறிந்துகொள்ளவேண்டும் என்பதாகத் தெரிகிறது.

    எனவே "காருணிகள் பித்ருக்களாவன" என்ற தலைப்பில்

    தர்ம சாஸ்த்ர சுருக்கம் - வைத்யநாத தீக்ஷிதீயம் - புத்தகம் - பக்கம் 230லிருந்து அப்படியே தருகிறேன்:

    சிறிய தகப்பன், அத்தை, அம்மான், பெரிய தாயார், சிறிய தாயார், ஸஹோதரிகள், தங்கை, தமைக்கைகளின் புத்ரர்கள்,

    பார்யை, மாமனார், அத்திம்பேர், மாட்டுப்பெண், மைத்துனன், குரு, யஜமானன், ஸ்நேஹிதன் இவர்களுக்கும் மஹாலய ச்ராத்தத்தில் செய்யவேண்டும்.

    மேலும், வைணவர்களுக்கு, இந்த கர்மாக்கள் செய்வது பற்றிய விசாரம் எதுவும் தேவையில்லை,

    சாஸ்த்ரம் சொல்லிற்று என்ற ஒரு காரணத்திற்காக மட்டும் செய்தால் போறும், பலன் யார் யாருக்கு
    என்று ஆராயத் தேவையில்லை என்ற கருத்தை வலியுறுத்தி, ஶ்ரீ.உ.வே.வேளுக்குடி க்ருஷ்ணன் ஸ்வாமி

    "யக்ஷ ப்ரச்ன உபந்யாஸத்தில்", ஸாதித்தருளும் ஒரு சிறு பகுதி ஒலிக் கோப்பினை இத்துடன் இணைத்துள்ளேன்.

    தாஸன்,

    தன்யோஸ்மி,
    என்.வி.எஸ் To download and hear the audio please go to: https://dl.dropboxusercontent.com/u/...prayojanam.mp3
    On 7 September 2013 17:23, VS yennappan@computer.net> wrote:

    SrI:



    Dear Sriman Parthasarathy :



    The detailed information on Mahalaya Paksham including the KaaruNya Pitrus are in the Volume II of Ahnika Grantam that is being released at DasavatAra Sannidhi , Srirangam by Srimath Azhagiyasingar today . Please refer to it for details .

    I have also copied Sriman Bruhaspaty NVS Swamy for additional commnets .

    Please register at ahobilasri.org for access to this content .

    Best Wishes,

    V.Sadagopan



    From: R. Parthasarathy

    Sent: Saturday, September 07, 2013 12:31 AM

    To: yennappan@computer.net

    Subject: Re: Mahalaya Paksham



    Respected Swamin,



    I read that we are supposed to perform Tharpanam during Mahalayam for our Karunya Pithrus such as Vaikundavaasi brothers and sisters of our parents. Does this include deceased brother-in-law (husband of wife's sister) who has no son. How about parents of step-mother when step mother is alive. Kindly educate me.

    Pranams

    Dasan Parthasarathy


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment


    • #3
      Re: sukruth mahalya tharpanam

      thanks mama. But the attachments (if i understand correctly) is all about what are the merits of performing tharpanam.

      Comment


      • #4
        Re: sukruth mahalya tharpanam

        Sri:
        Oh! I hope you need the manthrams and procedures?
        Then see below and use the side scroll bar and click on the topics to see full content of that topic.


        Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
        please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
        Encourage your friends to become member of this forum.
        Best Wishes and Best Regards,
        Dr.NVS

        Comment


        • #5
          Re: sukruth mahalya tharpanam

          மஹாளயபக்ஷத்தைத் தவிர, மற்ற பக்ஷங்களில் ப்;;;;ரதமை, ஷஷ்டி, ஏகாதசி, த்ரயோதசி, ஜன்மநக்ஷத்ரம், ரோஹிணீ, ரேவதீ, மகம் இவைகளில்

          மஹாளயம்
          கூடாது



          விதுரர்கள் மஹாளத்தை அன்னரூபமாய்ச் செய்ய அதிகாரமுள்ளவர்களல்ல
          பர்வதினத்தில், ப்ரத்யாப்திகச்ராத்தம் க்ரஹணத்தால் நிஷேதிக்கப்பட்டு மறுநாள் செய்யவேண்டிவரும் விஷயத்தில் பர்வதினத்தில் ப்ரத்யாப்திக ச்ராத்தத்தை ;ஹிரண்ய ரூபமாய்ச் செய்யவேண்டியது
          ஸ்வாமின் மேலேயுள்ள 3 கோட் களுக்கு சிறிது விளக்கம் வேண்டுகிறேன் 1ல் மஹாளயம் கூடாதுஎன்று உள்ளதே அது புரியவில்லை 2.விதுரர்கள் என்றால் யார்?
          3.பர்வதினம் என்றால் என்ன





          Last edited by soundararajan50; 04-10-14, 18:53. Reason: எழுத்துப்பிழை

          Comment


          • #6
            Re: sukruth mahalya tharpanam

            ஶ்ரீ:
            முதல் கோட்டில் உள்ள விஷயத்தில் உள்ளதாவது:
            மஹாளயபக்ஷம் என்று குறிப்பிடப்பபட்டுள்ள 15 நாட்களில் யாதுகாரணம் கொண்டும், மஹாளயத்தை பண்ண முடியாமல் போகுமானால் அதன்பிறகு மஹாளயம் பண்ணும்போது தவிர்க்கவேண்டிய விஷயங்களைத் தெரிவித்துள்ளார்கள்.

            விதுரர் என்பது - திருமணமாகி பத்நியை இழந்தவர்கள் - விடோயர்

            பர்வம் - என்பது பௌர்ணமியைக் குறிக்கும்.

            என்.வி.எஸ்


            Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
            please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
            Encourage your friends to become member of this forum.
            Best Wishes and Best Regards,
            Dr.NVS

            Comment

            Working...
            X