Announcement

Collapse
No announcement yet.

story of srirangam

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • story of srirangam

    Changed course of river cauvery at srirangam @ 1190AD




    காவேரி ஆற்றின் பாதை மாறிய கதை :-

    ஸ்ரீரங்கம் காவேரி ஆறு முன்பு ஒரு காலத்தில் தற்கால ராஜகோபுரம் அருகில் ஓடியாதாமே என்று பலர் சொல்ல கேட்டு இருக்கிறேன் ...அதை பற்றி ஒரு சிறு ஆய்வு ...

    ஸ்ரீரங்கம் கோவில் கல்வெட்டுக்களில் இருந்தும் சில விசயங்களை ஸ்ரீரங்கம் ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ கிருஷ்னமாச்சாரியார் அவர்கள் மிக தெளிவாக எடுத்து எழுதி உள்ளார்.. மேலும் ..

    ஸ்ரீரங்கம் கோவிலொழுகு நூலில் கீழ் கண்டவாறு குறிப்பிடப்பட்டு உள்ளது ..(இந்த நூல் ஸ்ரீரங்கம் கோவில் வரலாற்றை சுமார் 1000 ஆண்டுகளாக தொகுப்பட்ட நூல்)

    வருடாவருடம் தற்போதைய ராஜ கோபுரம் அருகில் உள்ள (கோபுரத்துக்கு உள் முதலில் இருக்கும் நாலு கால் மண்டபத்துக்கு இடது புறம்) திருகுறளப்பன் சந்நிதி ...அப்போது இந்த கோபுர சுவரே கிடையாது.

    இந்த 1780 AD ஓவியத்தில் தேர் இருப்பது திருக்குறளப்பன் சந்நிதிக்கே !!!இதுதான் நமது காவேரியின் வட கரையாக இருந்தது.






    பழைய கோவிலொழுவில் பதியப்பட்டவை ...

    மூன்றாம் குலத்துங்க சோழன் (1178-1218 AD) காலத்தில் தற்போது ராஜகோபுரம் அருகில் உள்ள திருக்குறளப்பன் சந்நிதி வரை காவேரி வெள்ளம் பெருக்கெடுத்து வந்து திருவரங்கத்தினுள் நீர் புகுந்து ஒவ்வொரு ஆண்டும் அபாயம் ஏற்பட்டது..

    இதை போக்க தற்போதைய மேலூர் அருகே உள்ள புந்நாக தீர்த்தம்
    (இது தற்போது மேலூர் அருகில் உள்ள விருச்சி மண்டபத்தில் உள்ள இந்த குளமே என்று நினைக்கிறேன் )



    அருகில் இருந்து திசை மாற்றி ஸ்ரீரங்கத்துக்கும் திருச்சிக்கும் இடையில் சிந்தாமணி கிராமம் வழியாக திருப்பி விட வேண்டி அப்போது ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்து வந்த பெரியவர் கூரநாராயண ஜீயர் என்போர், ஸ்ரீரங்கம் கோவிலை நிர்வாகம் பண்ணி வந்த கந்தாடை தோழப்பர் கலந்து சோழனுக்கு கோரிக்கை வைத்தனர்..



    இதை அறிந்த சிந்தாமணி கிராமத்து மக்கள் தங்களது கிராம எல்லையில் படுத்து இதை எதிர்த்து போராட்ட்டம் நடத்தினர் ...தண்ணீர் பற்றிய ஒரு போர்டட்டம் திருச்சியில் 1190AD இல் !!!

    கல்வெட்டு:-

    குலசேகரன் திருச்சுற்று (மூன்றாம்) கிழக்கு பகுதியில் கல்வெட்டு எண் A.R.E.No. 113 of 1938-39 கீழ் கண்டவாறு தெரிவிக்கிறது :-

    1. மூன்றாம் குலோத்துங்கன் இயற்பெயர் வீரராஜேந்திரன்
    2. அரசனுடைய ஆணைப்படி “அண்ணவாயில் உடையான் காங்கேயராயர் என்போன் நியாத்தினை எடுத்துச் சொல்பவராக (arbitrator) நியமிக்கப்பட்டார்.

    3. ஸ்ரீரங்கம் தேவஸ்தானத்திற்கு சொந்தமான நிலங்கள் திருவாழி பொறித்த கற்கள் (ஸ்ரீ சுதர்சன சின்னம் ) ஜம்புகேஸ்வரர் கோவில் நிலங்கள் திரிசூலம் பொறிக்கப்பட்ட கற்கள் எல்லைகளாக வைக்கப்பட்டன

    4. திருச்சிராப்பள்ளி வசித்தோருடைய நிலங்கள் திசை திருப்பி விடப்பட்ட காவேரியால் அழிக்கப்பட்டமையால் கொட திட்டை (தற்கால் கொத்தட்டை) என்கிற ஊரில் அவர்களுக்கு மாற்று நிலம் அளிக்கப்பட்டது







    “தென்மேற்கு சிராத் தென்னாற்றில் நி ......... திருச்சிராப்பள்ளி யுடையார் தேவதானம் ஆலங்குடியில் விட வெண்டும் நிலத் திருவரங்கத்துக்கு உடலாக விட்டு விட்ட நிலத்துக்கு தலைமாறு கொட திட்டையில் அழகிய மணவாளப் பெருமாள் திரு(நாமத்துக்) காணியிலே பற்றிப் பர்வர்தனை பண்ணக் கடவர்களாகவும் இப்....”

    ஒரு மிகப்பெரிய இட பரிவர்த்தனை நடந்து இருக்கிறது வருடம் 1198 AD இல்....





    1546 AD இல் விஜயநகர் அரசர்கள் காலத்தில் இந்த இட பரிவர்த்தனை பற்றி மீண்டும் ஒருமுறை குறிப்பாக சொல்லப்பட்டு இருக்கிறது ...

    விஜயநகர் மன்னன் சதாசிவராயன் கல்வெட்டு A.R.E. No.13 of 1936-37 , மூன்றாம் பிரகாரம் உள்புறம் அமைந்த கல்வெட்டு ..சிந்தாமணி கிராமத்தை ஸ்ரீரங்கம் கோவிலுக்கு காணிக்கையாக குடுத்த போது .. காவேரி ஓட்டம் திருத்தி அமைக்கப்பட்டமை விளக்கப்பட்டுள்ளது ..

    இந்த இரண்டாம் கல்வெட்டில் தற்போதைய திருமஞ்சன ஆறு (ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் சாலையில் உள்ள ஒரு பாலத்தை கடந்து வருவீகளே அதேதான் ) அன்றைய நமது காவேரியின் தென் கரை!!!


    காவேரியை திருப்பி விட்டபடியால் அந்த இடத்தில் நாணல் புற்கள் நடப்பட்டு நீர் மறுபடியும் வராமல் மலடாக ஆக்கப்பட்டமை பற்றியும் கூறுகிறது .. ஸ்ரீரங்கம் பகுதியில் வாழ்பவர் அனைவரும் அந்த சிறு வாய்க்காலை மலட்டுவாய்க்கால் என்ற அழைப்பர்..





    இவ்வாறாக ஸ்ரீரங்கம் மற்றும் திருஆனைக்கா கோவில்களை ஒட்டி ஓடிக்கொண்டு இருந்த காவேரி ஆறு 1190 வாக்கில் சோழ மன்னனால் மிகப்பெரிய முயற்சியால் தற்போது உள்ள இடத்திருக்கு மாற்றி அமைக்கப்பட்டது ..


    Source:http://srirangacharithram.blogspot.com/





  • #2
    Re: story of srirangam

    Oh what a detailed research?

    Comment

    Working...
    X