Announcement

Collapse
No announcement yet.

3. அழகர் அந்தாதி - 053/100 சோலை மலைக்கு அரசே ! என்னைĨ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 3. அழகர் அந்தாதி - 053/100 சோலை மலைக்கு அரசே ! என்னைĨ

    3. அழகர் அந்தாதி - 053/100சோலை மலை அரசே ! என்னைக் காப்பதற்கு நீ வரவேண்டும் !

    உடலம்புயங்கத்து உரி போல் விடும் அன்று , உவணப்புள்ளின்
    அ ட
    ம்புயமிசை நீ வரவேண்டும் - ஐ ஆனற்கும் ,
    மடலம்புயற்கும் , வரம் தரும் சோலை மலைக்கு அரசே !
    கடலம்புயர்வரையால் அடைத்தாய் ! - என்னைக் காப்பதற்கே



    பதவுரை : உடலம் + புயங்கத்து
    அட
    ல் + அம் + புய
    மடல் + அம்புயற்கும்
    கடல் + அம்பு + உயர்

    ஐ ஆனற்கும் ஐந்து முகங்களை உடைய சிவனுக்கும் ,
    மடல் அம்புயற்கும் தாமரையில் இருக்கும் பிரமனுக்கும்
    வரம் தரும் வரங்களைக் கொடுக்கும்
    சோலை மலைக்கு அரசே மாலிருஞ்சோலை மன்னனே !
    கடல் அம்பு உயர் வரையால்கடல் நீரை , உயர்ந்த மலைகளால்
    அடைத்தாய் அணை கட்டி அடத்தவனே !
    புயங்கத்து உரி போல் பாம்பு தன தோலை உரிப்பது போல் ,
    உடலம் விடும் அன்று என் உயிர் , இந்த உடலை விட்டு நீங்கும் போது
    என்னைக் காப்பதற்கே என்னைப் பாது காப்பதற்காக
    உவணப் புள்ளின் கருடப் பறவையின்
    அட
    ல் அம் புய மிசை வலிய அழகிய தோள்களின் மேல் ஏறி
    நீ வர வேண்டும் நீ எழுந்தருள வேண்டும்



    Last edited by sridharv1946; 16-09-13, 14:42.
Working...
X