Announcement

Collapse
No announcement yet.

பச்சரிசியா, புழுங்கலரிசியா? எது நல்லது?

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பச்சரிசியா, புழுங்கலரிசியா? எது நல்லது?

    பச்சரிசியா, புழுங்கலரிசியா? எது நல்லது?


    புழுங்கலரிசி என்பது நெல்லை அப்படியே வேக வைத்து எடுப்பது. இதனால் நெல்லின் தோலுக்கடியில் உள்ள வைட்டமின் பி மற்றும் நார்ச்சத்து அப்படியே அரிசியில் தக்க வைக்கப்படும். ஆனால், பச்சரிசியில், உமியெடுக்கும் போது, அந்தச் சத்துக்கள் காணாமல் போகின்றன. எனவே, புழுங்கலரிசியே சத்தானது.

    கைக்குத்தல் அரிசி, சிகப்பரிசி, பாஸ்மதி அரிசி, கவுனி அரிசி, வரகு அரிசி, தினை அரிசி, சாமை அரிசி என இன்று ஏகப்பட்ட அரிசி வகைகள் கிடைக்கின்றன. இவை அத்தனையுமே ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம் தருபவை. காரணம், இவை அனைத்திலும் கிளைசமிக் இன்டக்ஸ் (அதாவது, சாப்பிட்டதும் ரத்தத்தில் கலக்கும் ஆற்றல்) குறைவு. காலையில் இட்லியோ, தோசையோ சாப்பிடுகிறோம் என வைத்துக் கொள்வோம். அது 3 மணி நேரத்தில் செரித்து விடும். அரிசி உணவில் உள்ள சக்தியானது உடனடியாக ரத்தத்தில் கலந்து, சீக்கிரமே செரித்து விடுகிறது.

    சாதாரணமாக நமது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 80 முதல் 110 தான் இருக்க வேண்டும்.


    அரிசி உணவின் மூலம் ரத்தத்தில் சேர்கிற ஆற்றலானது, தேவைக்கதிகமாக இருக்கும்பட்சத்தில் அப்படியே சேமிக்கப்படுகிறது. இது சாதாரண உடல் நிலையில் உள்ளவர்களுக்கு ஓ.கே. அதுவே நீரிழிவு பாதிக்கப்பட்டவர்கள் என்றால், அவர்களுக்கு இன்சுலின் சுரப்பு குறைவாக இருப்பதன் விளைவாக, அதிகப்படியான ஆற்றலானது ரத்தத்தில் சேகரிக்கப்படும். அதனால்தான் நீரிழிவு உள்ளவர்களுக்கு பச்சரிசி வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.


    யாருக்கெல்லாம் அரிசி கூடாது?



    நீரிழிவு பாதித்தவர்கள், இதய நோய் உள்ளவர்கள், பருமன் உள்ளவர்கள், முட்டி வலி உள்ளவர்கள், விளையாட்டு வீரர்கள்… இவர்கள் அரிசி உணவைக் குறைத்து உண்ணலாம் அல்லது செரிமானத்துக்கு நிறைய நேரம் எடுத்துக் கொள்கிற சாமை அரிசி, தினை அரிசி போன்ற வகையறாக்களை சாப்பிடலாம்.


    பழைய சாதம் நல்லதா?



    மிகவும் நல்ல உணவு. இரவு புதிதாக வடித்த சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைத்துவிட்டு, காலையில் சாப்பிடலாம். அதில் ஈஸ்ட் உருவாகியிருக்கும். உடலுக்குக் குளிர்ச்சியானது. சின்ன வெங்காயத்துடன் சாப்பிடுவது இன்னும் சிறந்தது. நீரிழிவு உள்ளவர்கள், எடை குறைக்கும் முயற்சியில் உள்ளவர்கள் மட்டும் இதை சாப்பிட வேண்டாம். மற்றவர்களும் பழைய சாதம் சாப்பிடுகிற நாள்களில், உடலுக்கு வேலை கொடுக்கிற செயல்களில் ஈடுபடுவது நல்லது.


    Source:http://www.siruppiddy.net/?p=16603
Working...
X