Announcement

Collapse
No announcement yet.

3. அழகர் அந்தாதி - 055/100 அழகனே ! அருளாய் ! என்று உரை

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 3. அழகர் அந்தாதி - 055/100 அழகனே ! அருளாய் ! என்று உரை

    3. அழகர் அந்தாதி - 055/100அழகனே ! அருளாய் ! என்று உரைப்பீர் !

    கண்டாகனன், கண்ணன் அல்லால் கதி இன்மை கண்டு, அடைந்தது
    உண்டாகனம்ப ஒட்டாது உங்கள் ஊழ்வினை ; உண்மை அறிந்து ,
    அண்டாகனவண்ணனே ! அருளாய் என்று , அழகனுக்கே
    தொண்டாகனன்நெஞ்சினால் உரைப்பீர் , பிறர் தொண்டர்களே




    பதவுரை : கண்டாகனன்
    உண்டாக + நம்ப...
    அண்டா + கன...
    தொண்டு + ஆக + நல்...

    பிறர் தொண்டீர் பிற தெய்வங்களின் பக்தர்களே !
    கண்டாகனன் கண்டாகர்ணன் எனும் விஷ்ணுவை வெறுத்த சிவ பக்தன்
    கண்ணன் அல்லால் முக்தி தருவதற்கு கண்ணபிரானை அல்லாமல்
    கதி இன்மை கண்டு வேறு தெய்வம் இல்லாததை அறிந்து
    அடைந்தது உண்டாக சரணம் அடைந்த செய்தி வந்தவுடன்
    உங்கள் ஊழ்வினை உங்கள் விதியானது
    நம்ப ஒட்டாது அதனை நம்ப விடாது
    உண்மை அறிந்தே இனிமேலாவது உண்மையைப் புரிந்து கொண்டு
    அண்டா கன வண்ணனே "ஆயனே ! மேகம் போல் கருமையானவனே !
    அருளாய் என்று கருணை செய்வாய்" என்று
    அழகனுக்கே தொண்டு ஆக அழகனுக்கே அடிமை ஆவதற்காக ,
    நல நெஞ்சில் உரைப்பீர் நல்ல மனத்துடன் சொல்லுங்கள்
Working...
X