Announcement

Collapse
No announcement yet.

யோசனைகள் ... யோசனைகள் ... யோசனைகள் ..

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • யோசனைகள் ... யோசனைகள் ... யோசனைகள் ..

    யோசனைகள் ... யோசனைகள் ... யோசனைகள் ...
    By - சீதாலக்ஷ்மி, கொச்சி
    (நண்பர்களே காபி செய்து கொள்ளுங்கள்)


    1. குளியலறையில் பற்பசை, சோப்பு போன்றவை திறந்திருந்தால் கிருமித் தொற்று ஏற்படும். எலி, பல்லியின் சிறுநீர் அதில் பட்டு நோய்கள் பரவும் ஆபத்து உள்ளது. எனவே அவற்றை சோம்பல்படாமல் மூடி வைக்க வேண்டும்.

    2. மார்க்கெட்டில் வெட்டுப்பட்ட பழங்களோ, காய்கறிகளோ வாங்கக் கூடாது. அதன் வழியாக கிருமிகள் உட்புகுந்திருக்கும் என்பதால் நோய்கள் வர வாய்ப்புண்டு.

    3. பள்ளிக்குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸில் வைக்கும் அயிட்டங்களை ருசி பார்த்துவிட்டு பேக் செய்வது நல்லது. அவசரத்தில் உப்பு, காரம் கூடுதலாகவோ, குறைவாகவோ இருக்கலாம். அதைச் சரி செய்து அனுப்பினால் குழந்தைகள் வயிறாரச் சாப்பிடுவார்கள். நமக்கும் திருப்தி.

    4. டிவி ரிமோட், கடிகாரம், கேமராவுக்கு அடிக்கடி பாட்டரி வாங்குகிறோம். அப்படி வாங்கி மாற்றும்போது பழைய பாட்டரிகளைக் கவனக் குறைவாக புதிய பாட்டரிகளுடன் கலந்து வைத்துவிட்டு சிறிது நேரம் குழம்புவோம். இதைத் தவிர்க்க ஒவ்வொரு முறை வாங்கும் போதும், பேட்டரியின் கம்பெனியை மாற்றி விட்டால் குழப்பம் வராது.

    5. வேலைக்குச் செல்லும் இல்லத்தரசிகள் விடுமுறை நாட்களில் மிளகு, சீரகம், சோம்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை மிக்ஸியில் பொடியாக அரைத்து வைத்துக் கொண்டால், காய்கறி பொரியல், கலந்த சாதம், முட்டை ஆம்லெட் போன்றவற்றுக்கு அவசரத்துக்கு உதவும்.

    6. வெளியூர் பயணத்துக்குச் செல்லும்போது தோசை, ஊத்தப்பம் போன்றவற்றின் மீது லேசாகத் தண்ணீர் தடவி பிறகு பேக் செய்தால் அந்தப் பலகாரங்கள் வறண்டு போகாமலும் மிருதுவாகவும் இருக்கும்.

    7. மாதாந்திர மளிகைச் சாமான்கள் வாங்கியதும், டப்பாவில் அடைப்பதற்கு முன்பு, சென்ற முறை மீந்துபோன சாமான்களை சிறு பாலிதீன் பைகளில் போட்டுவிடுங்கள். புதிதாக வாங்கியவற்றை டப்பாவில் நிரப்பியதும் அதன் மேலாக அந்தந்த சாமானுக்குரிய பாலிதீன் பைகளை வைத்துவிட்டால் முதலில் பழையனவற்றைப் பயன்படுத்தலாம். அவை தீர்ந்த பிறகு புதியனவற்றைப் பயன்படுத்தலாம்.

    8. தோசைக் கல்லில் வெடிப்புகள், ஓட்டைகள் ஏற்படுவதைத் தவிர்க்க தோசை வார்த்து முடிந்ததும்,கல்லை எண்ணெய்த் துணியால் துடைத்துவிடுங்கள்.

    9. எண்ணெய்ப் பசை படிந்த பாத்திரங்களை பளிச்சென்று ஆக்க கோதுமை சலித்த தவிட்டை நீர் சேர்க்காமல் பாத்திரத்தில் தேய்த்துப் பாருங்கள். பாத்திரங்கள் பளபளப்பாகிவிடும்.

    10. குக்கர்,மிக்ஸி போன்றவற்றின் கேஸ்கட்டுகளைப் பயன்படுத்திய பிறகு, ஒரு மணி நேரம் குளிர்ந்த நீரில் ஊறவிட்டால் அவை நீண்ட நாட்கள் உழைக்கும்.

    11.சமையலறை ஜன்னல், மேடை டைல்ஸ் மற்றும் சமையலைறையில் உள்ள எக்ஸôஸ்ட் பேன் எண்ணெய்ப் பிசுக்கைப் போக்க, மண்ணெண்ணெய் அல்லது பெயின்ட் கடைகளில் கிடைக்கும் தின்னர் கொண்டு துடைத்தால், பளிச்சென்று ஆகிவிடும்.

    12. சமையலறையில் பாத்திரம் கழுவும் ஸ்டெயின்லஸ் ஸ்டீல் சிங்கைச் சுத்தப்படுத்த பழைய செய்தித்தாள்களைக் கொண்டு தேய்த்துக் கழுவினால் போதும். அழுக்கு நீங்கி சுத்தமாகிவிடும்.

    13. சமையலறையில் நீண்ட நாட்களுக்கு நல்லெண்ணெய் ஸ்டாக் வைத்தால், சிக்குவாடை வீசும். இதைத் தவிர்க்க நல்லெண்ணெய் வாங்கி வந்தவுடன் அதில் சிறு துண்டு கருப்பட்டி அல்லது வெல்லத்தைப் போட்டுவிடுங்கள். சிக்குவாடை வீசாது.

    14. சமையலறையில் பயன்படுத்தும் கை துடைக்கும் துணி, பிடி துணி போன்றவற்றைத் தண்ணீரில் சிறிது ஷாம்பு கலந்து ஊறவைத்து, அலசினால் பளிச்சென்று இருப்பதுடன் வாசனையாகவும் இருக்கும்.



    15. சமையலறையில் உபயோகிக்கும் குக்கர் சூடாக இருக்கும்போதே கைப்பிடிகளிலுள்ள ஸ்க்ரூக்களை நன்றாக முறுக்கி வைத்துக் கொண்டால் பிடிகள் அடிக்கடி லூஸôகாது.

    16. முளைக்கீரையை உப்புப் போட்டு, வேக வைத்து தேங்காய், பச்சை மிளகாய் அரைத்துக் கலந்து இரண்டு கரண்டி புளிக்காத தயிர் விட்டு கடுகு தாளித்தால், கீரைப் பச்சடி சுவையாக இருக்கும்.

    17. பாகற்காய் பொரியல் செய்யும்போது முளைக்கீரை அல்லது அரைக் கீரையைப் பொடியாக நறுக்கிச் சேர்த்து வதக்கினால் கசக்காது. நல்ல மணமாகவும் இருக்கும்.

    17.முருங்கைக் கீரையைச் சமைக்கும்போது சிறிது சர்க்கரை சேர்த்தால், ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளாமல் உதிரியாக இருக்கும்.

    18. முள்ளங்கி இலையைத் தூக்கி எறிந்துவிடாமல் அதை நறுக்கி, சிறிது எண்ணெய் விட்டு வதக்கி, மிளகாய் வற்றல், எலுமிச்சம் பழம், பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து வறுத்து, அதைக் கீரையுடன் அரைத்து துவையல் செய்யலாம். சாதத்தில் கலந்து, நெய் ஊற்றிச் சாப்பிட சுவையாகவும் இருக்கும். ஆரோக்கியமும் கூட.

    19. எந்த வகையான கீரைகளையும் எப்படிச் சமைத்தாலும் அதோடு கூட இரண்டு வேக வைத்த உருளைக் கிழங்குகளை மசித்துக் கலந்துவிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

    20. முருங்கைக் கீரை, அகத்திக் கீரையை வதக்கும்போது, கரண்டியின் அடிப்பகுதியை வைத்துக் கிளறவும். அப்படிக் கிளறினால் கட்டி விழாமல் கீரை உதிரி உதிரியாக இருக்கும்.

    `21. கீரை கடையும்போது சிறிது வெங்காயம்,வடகம், இரண்டு காய்ந்த மிளகாய், சிறிது சீரகம் தாளித்துக் கொட்டி கீரை கடைந்தால் கமகம வாசனையுடன் கீரை மணக்கும்.



    22. பசலைக் கீரை உடலுக்குக் குளிர்ச்சி தரக் கூடியது. இதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். உடல் சூடு, சிறுநீரகக் குறைபாடுகள் நீங்கும்.


    Source:harikrishnamurthy
Working...
X