Announcement

Collapse
No announcement yet.

JUST TO KNOW ABOUT CHENNAI

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • JUST TO KNOW ABOUT CHENNAI

    JUST TO KNOW ABOUT CHENNAI



    சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம்
    , பல சிறு சிறு கிராமங்களின் இணைவு தான். அப்படி இணைந்த கிராமங்களின் பெயர்கள் உருவானதின் பின்னணியை தெரிந்து கொள்ளுங்கள்.

    Ø108 சக்தி ஸ்தலங்களில் 51வது ஊர் ஆகையால் ஐம்பத்து ஒன்றாம் ஊர்என்று அழைக்கப்பட்டு, பின்னாளில் இவ்வூர் அம்பத்தூர் என மாறியது.


    ØArmed Vehicles And Depot of Indiaஎன்பதின் சுருக்கமே ஆவடி (AVADI)


    Ø1912ம் ஆண்டில் 25 ஏக்கர் பரப்பளவில் ஒரு ஆங்கிலேயரால் Chrome Leather Factory என்ற ஒரு தோல் பதனிடும் தொழிற்சாலையை தொடங்கியதால் அப்பகுதிக்கு குரோம்பேட்டை என்ற பெயர் உருவானது

    Ø17,18 ம் நுற்றாண்டுகளில் நவாப் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருந்தது இப்பகுதி. அவருடைய குதிரைகளின் பசியை போக்கும் நந்தவனமாக
    இது விளங்கியதால், கோடா பக்(பொருள்- Garden of horses)என்று உருது மொழியில் பெயர் வைத்தார். பின்னாளில் அதுவே கோடம்பாக்கம் ஆக மாறியது.

    Øதென்னை மரங்கள் நிரம்பிய பகுதி ஆகையால் தென்னம்பேட்டை என பெயர் வைத்தார்கள். பிற்பாடு அது தேனாம்பேட்டை ஆக மாறிப்போனது.

    Øசையத்ஷா என்ற இஸ்லாமிய முக்கிய பிரமுகர் வைத்திருந்த நிலப்பகுதியின் அடிப்படையில், சையத்ஷாபேட்டை என்றிருந்த பெயர், சைதாப்பேட்டை என்றாகியது.


    Øஉருது வார்த்தையான சே பேக் (பொருள்- Six gardens) என்பதிலிருந்து உருவானது தான் சேப்பாக்கம்.

    Øசௌந்தர பாண்டியன் பஜார் என்பதின் சுருக்கமே பாண்டி பஜார்.

    Øகலைஞர் கருணாநிதி நகரை சுருக்கி கே.கே. நகர் என அழைக்கிறோம்.

    Øசிவபெருமானுக்கு உகந்த வில்வமரங்கள் அதிகம் இருந்ததால் மகாவில்வம் என அழைக்கப்பட்ட இப்பகுதி, பின்பு மாவில்வம் என்றாகி, காலப்போக்கில் எப்படியோ மாம்பலம் ஆகி விட்டது.

    Øபல்லவர்கள் ஆட்சி செய்ததால் பல்லவபுரம் என்றழைக்கப்பட்ட இடம் தான் பல்லாவரம்.

    Øசென்னை மாகாண முதல்வராக இருந்த பனகல் ராஜாவின் நினைவாக இவ்விடம் பனகல் பார்க் என அழைக்கப்படுகிறது.

    Øநீதி கட்சி தலைவர் சர். பி.டி.தியாகராஜன் செட்டியின் பெயராலேயே இப்பகுதி தி.நகர்(தியாகராய நகர்) என அழைக்கபடுகிறது

    Øகடற்கரைப்பகுதியான இங்கு புரசை மரங்கள் அதிகமாக இருந்ததால், இப்பகுதி புரசைவாக்கம் ஆனது.

    Øஅதிக அளவில் மல்லிகை பூக்கள் பயிரிடப்பட்ட பகுதி இது. திருக்கச்சி நம்பி ஆழ்வார் தினமும் இங்கிருந்து பூக்களை பறித்துக்கொண்டு சென்று
    காஞ்சி வரதராஜபெருமாளை வழிபட்டுவந்தார். அதனால் இவ்விடம் சமஸ்கிருதத்தில் புஷ்பகவல்லி என்றும், தமிழில் பூவிருந்தவல்லி என்றும்
    அழைக்கப்படுகிறது. பின்னாளில் இது பூந்தமல்லி யாக மாறியது. வல்லி என்பது தெய்வத்தை குறிக்கும் ஒரு பெயர்.

    Ø17ம் நூற்றாண்டில் இங்கு வாழ்ந்து வந்த ஒரு முஸ்லீம் துறவிகுணங்குடி மஸ்தான் சாகிப்’. இவரது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள
    தொண்டி. ஆகையால் அப்பகுதி மக்கள் அவரை தொண்டியார் என அழைத்தனர். அந்த ஏரியா தான் தற்போதைய தண்டயார்பேட்டை.

    Øமுன்பு இப்பகுதி ஆடு மாடுகள் மேயும் திறந்தவெளியாக இருந்துள்ளது. அதனாலேயே மந்தைவெளி என்றழைக்கபடுகிறது.

    Øமயில் ஆர்ப்பரிக்கும் ஊர் என்பதே மயிலாப்பூர் என மாறிப்போனது.

    Øபல்லவர்கள் காலத்தில் போர்கள் நடத்த இவ்விடத்தையே பயன்படுத்தியதால், இப்பகுதி போரூர் எனப்படுகிறது.

    Øசில நூறு வருடங்களுக்கு முன்பு இப்பகுதி முழுவதும் மூங்கில் மரங்கள் இருந்தது. அதனாலேயே பெரம்பூர் எனப்படுகிறது.

    Øதிரிசூல நாதர் ஆலயம் இருப்பதால் இந்த ஏரியா திரிசூலம் என்று அழைக்கப்படுகிறது.

    Øபார்த்தசாரதி கோவிலின் எதிர்ப்புறம் இருக்கும் குளத்தில் (கேணி) நிறைய அல்லிகள் பூக்கும். அதன் காரணமாக இப்பகுதிக்கு திருஅல்லிக்கேணி என பெயர் உருவாக்கி, பின்பு திருவல்லிக்கேணி யாகி, தற்போது Triplicaneஎன மாற்றம் கண்டுள்ளது.

    Ø1787ல் தாமஸ் பாரி என்பவர் இப்பகுதில் EID Parry (India) Ltd கம்பெனியை நிறுவினர். வங்கி மற்றும் வணிகத்திற்கு பிரதான இடமாக இப்பகுதி மாறியதால் பாரிமுனை(பாரிஸ் கார்னர்) எனப் பெயர் பெற்றது.

    Øமயிலாப்பூரின் ஒரு பகுதி லஸ், போர்ச்சுகீசியர் இந்தியாவை நோக்கி வந்த காலத்தில், சென்னைக் கடற் கரையை நோக்கி வரும் வேளையில், ஒரு தெய்வீக ஒளி அவர்களுக்கு வழி காட்டியாகத் தெரிந்ததாம். கடற் கரையை அடைந்த உடன் அந்த ஒளி மறைந்து விட்டதாம். கரை சேர்ந்த மாலுமிகள் அந்த இடத்தில் தேவாலயம் ஒன்றை கட்டினார்கள். அதை லஸ் தேவாலயம் என்றழைத்தனர். போர்ச்சு கீசிய மொழியில் லஸ் என்றால் ஒளி என்று பொருள்.

    Øதற்போது எக்மோர் (எழும்பூர்) என்று அழைக்கப்படும் பகுதி, பக்கத்துப் பக்கம் இருந்த ஏழு குடியிருப்புப் பகுதிகளின் தொகுப்புப் பெயராக எழாம்பூர் என்று வழங்கப்பட்டதாகப் பரவலாகக் கருதப்படுகிறது.

    Ø300ஆண்டுகளுக்கு முன், ஆங்கிலேயர்கள் இங்கு நெசவாளர் குடியிருப்பை அமைத்தனர். நெசவாளர்களின் சிறுதறிகள் இங்கே இயங்கியதால், சின்ன+தறி+பேட்டை= சின்னதறிப்பேட்டை என்ற பெயர் ஏற்பட்டது. நாளடைவில் சிந்தாதிரிப்பேட்டை என மருவி விட்டது.

    Øஆங்கிலேயர்கள் பெரியளவில் மாளிகைகள் கட்டி வாழ்ந்தனர். சுதந்திரத்திற்குப் பிறகு, ஆங்கிலேயர்களிடம் பெரும் வணிகர்களான செட்டியார்கள், அவ்விடத்தை வாங்கினர். செட்டியார்கள் அதிகம் வாழ்ந்த இடம் என்ற காரணத்தால் செட்டியார்பேட்டை, செட்டிப்பேட்டை என்று அழைக்கப்பட்டது. இதை முழுமையாக அழைக்க முடியாத ஆங்கிலேயர், சேத்துப்பட்டு எனச் சுருக்கினர்.

    Øபாந்தியன் சாலை- பொது மக்கள் குழுமும்கூடம் என்பது பேந்தியன் என்பதைக் குறிக்கும் சொல்லாக உள்ளது. இந்தப் பகுதி தற்போது அரசு அருங்காட்சியகத்தை உள் ளடக்கிய சில பகுதியைக் குறிக்கிறது.

    Øமுகப்பேர்- முகப்பு ஏரி எனப்பிரித்துப் பொருள் கொள்ளலாம். ஏரியின் முகப்புப் பகுதியில் உள்ள ஊர் என்பது பொருள். இதன் அருகே ஏரி இன்றும் காணப்படுகிறது.

    Øவடசென்னையில் நீண்ட தெருவின் வட கோடியில் நாணயங்கள் அச்சடிப்பதற்காக கட்டப்பட்ட கட்டடம் காரணமாக இப்பெயர் உருவானது. ஏற்கனவே அங்கிருந்த தொழிற்சாலை ஒன்றினை அகற்றி விட்டு, தங்கநாணயத் தொழிற்சாலை அமைக்கும் பணிகள் துவங்கின. கி.பி., 1807ல் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது; இயந்திரங்கள் 1841ல் தான் பொருத்தப்பட்டன. ஆனாலும், இங்கு நாணயங்கள் அச்சடிக்கப்படவே இல்லை. இருந்தபோதிலும், இம்முயற்சிகளே தங்கசாலை (மின்ட்)எனப் பெயர் பெறக் காரணமாக அமைந்து விட்டன.

    Øஆழ்வார்பேட்டை- முதலாழ்வார் மூவருள் ஒருவரான பேயாழ்வார் பிறந்த இடம் என்பதால் இப்பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது. பேயாழ்வார் கோவிலுக்கு உரிய நிலங்கள் இருந்ததாலும் இப்பெயர் பெற்றது.

    Øஆயிரம் விளக்கு - ஆயிரம் விளக்குகள் கொண்ட பிரார்த்தனை அறை, நவாப் உம்தாத் உம் உமராவால் இங்கு கட்டப்பட்டதால் இப்பெயர் பெற்றது என்ற கருத்து சொல்லப்படுகிறது. ஆனால், ஆதாரமற்ற கருத்தாகவே இது உள்ளது. நவாப் கட்டியதாக தகவல் இல்லை.
    மொகரம் பண்டிகை கொண்டாடப்படும் போது, இப்பகுதியில் இருந்த தொழுகை நடத்தும் இடத்தில் ஆயிரம் விளக்குகள் ஏற்றி வைப்பர்; இதனால் இப்பெயர் பெற்றது என்ற கருத்தும் உள்ளது.


    Øகோட்டூர் - கோடு என்றால் வளைவு என்று ஒரு பொருள் உண்டு. அடையாறு ஆறு, சைதாப்பேட்டையில் இருந்து, கோட்டூர் வழியாக அடையாறு சென்று, கடலில் கலக்கிறது கோட்டூர் அருகே வளைந்து பின் செல்கிறது. ஆற்றங்கரையில் வளைவில் இருக்கும் ஊர் என்ற பொருளில் கோட்டூர் எனப் பெயர் பெற்றிருக்கலாம்.


    Øவேளச்சேரி - இவ்வூரின் பழைய பெயர் வெளிச்சேரி. பிராமணர்களுக்காக அளிக்கப்பட்ட பிரமதேயம்எனத்தெரிய வருகிறது. மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் வெளிச்சேரி என்றும் ஜினசிந்தாமணிச் சதுர்வேதி மங்கலம் எனவும் அழைக்கப்பட்டிருக்கிறது. கோட்டூர் நாட்டுக்கு உட்பட்டது என்ற குறிப்பால், கோட்டூருக்கு வெளியே அமைந்த சேரி, “வெளிச்சேரிஎன அழைக்கப்பட்டிருக்கலாம்.

    Øதிருவான்மியூர் - வான்மிகம் என்றால் புற்று என்று ஒரு பொருள் உண்டு. புற்றுகள் நிறைந்த பகுதியாக இது அறியப்படுவதால், “திருஎன்ற அடைமொழி பக்தி இயக்க காலத்தில் சேர்க்கப்பெற்று திருவான்மியூர் எனப் பெயர் பெற்றிருக்கலாம்.


    These etails are as from this Source:http://ursdeepan.blogspot.com/2013/03/just-to-know-about-chennai.html
Working...
X