திருமணத்திற்கு இருக்கும் பிராமண பெண்களின் ஜாதகங்கள்/விவரங்கள் தமிழ்நாடு பிராமணர் சங்கத்தால் வரவேற்கப் படுகின்றன.
21 வயதும் அதற்கு மேலும் இருக்கக்கூடிய பெண்களின் ஜாதகங்கள் அவரவர் பெற்றோர்கள் வழியாகவோ அல்லது உறவினர்கள் வழியாகவோ அல்லது நேரிடையாகவோ எங்களுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். நமது THAMBRAAS மாநிலத் தலைமை அலுவலகத்தில் இந்த விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, சங்கத்தின் மாதாந்திர பத்திரிக்கையிலும் இலவசமாக பிரசுரிக்கப்படும். பெறப்படுகின்ற அனைத்து தகவல்களும் நமது சங்கத்தின் (நூற்றுக்கணக்கான) கிளைகள் மற்றும் மாவட்ட அமைப்புகள் வழியாக சரிபார்க்கப்படும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
வசதி குறைந்த குடும்பங்களைச் சார்ந்த பெண்களுக்கு திருமணத்திற்கான செலவினங்களுக்கு உதவிட தமிழ்நாடு பிராமணர் சங்கம் ஏற்பாடு செய்திடும். மூன்று அல்லது அதற்கு மேல் பெண் குழந்தைகள் இருக்கக்கூடிய பெற்றோர்களுக்கு மாதா மாதம் உதவித்தொகை வழங்கும் சேவை திட்டம் நமது தமிழ்நாடு பிராமணர் சங்கத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. மூன்று பெண் குழந்தைகள் அல்லது அதற்கு மேல் உள்ள பெற்றோர் உடனடியாக சங்கத்திற்கு எழுத்து வழியாக முழு விலாசம் குடும்ப விவரங்கள் மற்றும் தொலைபேசி எண்ணுடன் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

N நாராயணன்
மாநிலத் தலைவர்
தமிழ்நாடு பிராமணர் சங்கம் (THAMBRAAS)
044-24642569, 044-24611912
ungalnarayanan@gmail.com
.


Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends