Announcement

Collapse
No announcement yet.

கோயில்களில் நவக்கிரகங்களின் அமைப்பு

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கோயில்களில் நவக்கிரகங்களின் அமைப்பு

    கோயில்களில் நவக்கிரகங்களின் அமைப்பு
    ----------------------------------------------------------




    அனைத்து சிவாலங்களிலும்,ஈசானிய மூலையில்(வடகிழக்கு) நவக்கிரகங்கள் மேற்குதிசை முகப்பாக அமைந்திருக்கும்.நடுவில் இருக்கும் கிரகம் சூரியன்.சூரியனுக்கு கிழக்கில் சுக்கிரனும்,மேற்கில் சனியும்,வடக்கில் குரு,தெற்கில் செவ்வாய்,வடகிழக்கில் புதன்,தென் கிழக்கில் சந்திரன்,வட மேற்கில் கேது,தென் மேற்கில் ராகுவும் அமைந்திருப்பர்.

    சூரியன் கிழக்கு முகமாக இருப்பார். சந்திரன்-மேற்கு; செவ்வாய்- தெற்கு; புதன்-வடக்கு; குரு-வடக்கு; சுக்கிரன்-கிழக்கு; சனி-மேற்கு; ராகு-தெற்கு; கேது-தெற்கு. இந்த முறையில் அமைந்திருப்பார்கள்.ஒவ்வொரு நவக்கிரகமும் தனித்தலத்தில்தான் தன் வாகனத்துடன் காட்சியளிப்பார்கள்.சிவாலங்களில் இருக்கும் நவக்கிரகங்கள் பெரும்பாலும் தன் வாகனத்துடன் காட்சியளிப்பதில்லை


    Click image for larger version

Name:	Navagraham.jpg
Views:	1
Size:	56.5 KB
ID:	35177

    நவக்கிரகங்களை 7 முறை கடிகார சுற்றிலும்,2 முறை எதிர் சுற்றிலும் வலம் வந்து வணங்கவேண்டும்.ஏனென்றால் சூரியன் முதலான ஏழு கிரகங்கள் இடமிருந்து வலமாக சுற்றும் ஆனால் ராகு,கேது இரு கிரகங்களும் வலமிருந்து இடமாக சுற்றும்.

    பெரும்பாலும் நவக்கிரக ஸ்லோகங்கள் சமஷ்கிருதத்தில் இருக்கும்.அதை அனைவரும் மனனம் செய்து சொல்வது சிரமம்.ஆதலால் கீழ்கண்ட எளிய முறையில் சொல்லலாம்.

    சூரியனே போற்றி,சந்திரனே போற்றி,செவ்வாயே போற்றி,புதனே போற்றி,குருவே போற்றி,சுக்கிரனே போற்றி,சனியே போற்றி,ராகு&கேதுவே போற்றி போற்றி என சொல்லிகொண்டே நவக்கிரகத்தை வழிபடலாம்.

    அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.
Working...
X