6-ம் எண் பலன்கள்;
--------------------------
6-ம் எண்ணின் ஆதி பத்தியம் பெற்றகிரகம் சுக்கிரன்.அதிர்ஷ்டத்தையும்,அன்பையும் அள்ளிக்கொடுக்கும் கிரகம் எதுவென்றால் அது சுக்கிரன்தான்.அதிக சிந்தனை திறனும்,கற்பனை திறனும் கொண்டவர்களாக இருப்பார்கள்.

6,15,24 இந்த எண் கொண்டவர்கள் இயல்,இசை,நாடகத்தில் ஆர்வமாக இருப்பார்கள்.கற்பனை திறனும்,அறிவும் அதிகமாக இருக்கும்.கடவுள்,சாஸ்திரங்கள் மீது நம்பிக்கை இருந்தாலும் வெளியில் காட்டிகொள்ளமாட்டார்கள்.உடல் உழைப்பால் சாதிப்பதை விட அறிவால சாதிக்கக்கூடியவர்கள்.

தன் வாழ்வில் முன்னேற கடுமையாக போராடக்கூடியவர்கள்.அடுத்தவர்களுக்கு உதவி செய்ய தயங்க மாட்டார்கள் இருந்தாலும் உதவி பெற்றவர்கள் நன்றி மறக்கக்கூடாது என எதிர்பார்ப்பார்கள்.ஆணாக இருந்தாலும்,பெண்ணாக இருந்தாலும் எதிர்பாலினருடன் அதிக ஈர்ப்பாக இருப்பார்கள்.சிற்றின்பத்தில் அதிக நாட்ட,ம் இருக்கும்.இதனால் பொருள் இழப்பு எற்படவும் வாய்ப்புண்டு.

இந்த 6-ம் எண் கொண்டவர்கள் குபேரனின் குழந்தைகளாக கருதப்படுகிறது.ஏதோ ஒரு வழியில் இவர்களுக்கு பணம் வந்து கொண்டே இருக்கும்.ஆனால் அதை சேமிக்கும் பழக்கம் இருக்காது.தன்னை அழகு படுத்தி கொள்வதில் முகுந்த நாட்டம் கொண்டவர்கள்.

ஓவியம்,சிற்பம்,கலை,பாடலாசிரியர்,இயக்குனர்,கட்டிடகலை,அழகு சாதன வடிவமைப்பு,சங்கீதம்,பின்னணி பாடகர் போன்ற துறைகளில் நாட்டம் இருக்கும்.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends