ஸ்ரீஆஞ்சநேயருக்கு வெண்ணேய் சாத்துவது ஏன்?
-------------------------------------------------------------------
தியாகத்திற்கும்,நட்பிற்கு இலக்கணமாக வாழ்ந்தவர் ஆஞ்சநேயர்.ராமனின் மீதுள்ள அன்பினாலும்,பக்தியாலும் தன்னுயிரையும் பொருட்படுத்தாது பல உதவிகள் செய்தவர்.

ராம ராவண போர்க்களத்தில்,ராமனையும்,லட்சுமணையும் தன் இரு தோள்களிலும் சுமந்துகொண்டு செல்லும் போது ராவணன் தன் வில்லினால் ஏகப்பட்ட அம்புகள் மூலம் அனுமனை தாக்குகிறார் அதில் அனுமனுக்கு காயங்கள் ஏரளாம் மேலும் போர்க்களத்தில் அனுமன் பட்ட துன்பங்கள் கொஞ்சநஞ்சமல்ல.ராம சேவைக்காக தன் உடம்பையே புண்ணாக்கிகொண்டவர்.

அந்த புண்கள் ஆறுவதற்கு உடம்புக்கு குளிர்ச்சி தரக்கூடிய வெண்ணெயை தடவினார்கள்.அதனால்தான் அனுமனுக்கு வெண்ணெய் சாத்தும் பழக்கம் வந்தது.இன்னொரு தத்துவமும் சொல்லப்படுகிறது வெண்ணெயின் நிறம் வெண்மையாகும் அதேபோல் வெள்ளையான மனம் கொண்டவர்களை தன்னிடம் அனுமன் இணைத்துகொள்வார் என்பதை உண்ர்த்தவே வெண்ணெய் சாத்தும் பழக்கம் ஆகும்.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிட்ரமணியன்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends